கடனை திருப்பிக் கொடுக்காததால் டிராக்டர் ஏற்றி பெண் படுகொலை

ஆந்திர மாநிலத்தில், வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காத ஆத்திரத்தில், பெண்ணை டிராக்டர் ஏற்றி ஒருவர் கொலை செய்துள்ளார்.

கடனை திருப்பிக் கொடுக்காததால் டிராக்டர் ஏற்றி பெண் படுகொலை
மாதிரிப் படம்
  • Share this:
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள சிவபுரதாண்டா-வைச் சேர்ந்த மாத்துருபாய் என்ற பெண்மணி, தனக்கு சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தை அதே கிராமத்தைச் சேர்ந்த சீனிவாச ரெட்டி என்பவரிடம் அடமானமாக வைத்து மூன்று லட்ச ரூபாய் பணம் வாங்கியிருந்தார்.

இந்நிலையில் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு சீனிவாச ரெட்டி மாத்துருபாய்க்கு அழுத்தம் கொடுத்து வந்த நிலையில், மாத்துருபாய் தன்னால் பணத்தை தற்போது திருப்பிக் கொடுக்க முடியாது எனவும், மார்க்கெட் விலைக்கு நிலத்தை தாங்களே வாங்கிக் கொண்டு மீதி பணத்தை கொடுக்குமாறு கேட்டுள்ளார்.

ALSO READ :  ஓசூரில் கள்ளநாட்டுத் துப்பாக்கிகளை வைத்திருந்தோர் தாமாக முன்வந்து வனத்துறையிடம் ஒப்படைப்பு


ஆனால் நிலத்தை சொந்தமாக்கிக் கொண்டு மீதி பணத்தை திருப்பி தர விருப்பப்படாத சீனிவாச ரெட்டி, மாத்துருபாய் வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது, டிராக்டரில் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது கோபம் தலைக்கேறிய சீனிவாச ரெட்டி, டிராக்டரை மாத்துருபாய் மீது ஏற்றி அவரை படுகொலை செய்து, அங்கிருந்து தப்பியோடியுள்ளார். போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
First published: August 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading