உ.பி. அரசு விளம்பரத்தில் கொல்கத்தா பாலம்: அரசியல் கட்சிகள் விமர்சனம்!

விளம்பரம்

விளம்பரத்தில் தவறே இருந்தாலும் இது தொடர்பாக நீதிமன்றத்தை தான் நாடவேண்டும். சமூக வலைதளத்தில் கூச்சல் போடக்கூடாது என்று மேற்கு வங்க பாஜக தெரிவித்துள்ளது.

  • Share this:
    முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் உத்தரப் பிரதேசம் அடையும் மாற்றம் என்ற தலைப்பில் உத்தரப் பிரதேச அரசு வெளியிட்டுள்ள விளம்பரத்தில் மேற்கு வங்கம் மாநிலத்தின் கொல்கத்தாவில் உள்ள மேம்பாலம் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் இதனை விமர்சித்துள்ளன.

    உத்தரப் பிரதேசம் மாநிலம் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆட்சியின் கீழ் அடையும் மாற்றங்கள் என்ற தலைப்பில் அம்மாநில அரசு, நாளிதழ் ஒன்றில் இன்று  முழுப்பக்கம் விளம்பரம் வெளியிட்டுள்ளது. அதில், 2017ம் ஆண்டு வரை உத்தரப் பிரதேச மாநிலம் வளர்ச்சி அடையவில்லை என்றும் தற்போது யோகி ஆதித்யநாத் தலைமையில் பெரும் வளர்ச்சியை பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.  மொத்த மாநில உற்பத்தியில் இந்திய அளவில் உத்தரப் பிரதேசம் 2வது இடத்தில் இருப்பதாக விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்த படத்தில் மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள மா மேம்பாலம் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விளம்பரத்தில் இடம்பெற்றுள்ள கட்டிடமும் மேற்கு வங்கத்தில் உள்ள ஹோட்டல் கட்டிடம் ஆகும்.  மேற்கு வங்கத்தின் வளர்ச்சியை தங்கள் மாநிலத்தின் வளர்ச்சிபோல் உத்தரப் பிரதேச அரசு காட்டுவதாக சமூக ஊடகத்தில் பலரும் விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.

    உத்தரப் பிரதேச அரசின் இந்த விளம்பரத்தை மேற்கு வங்க மாநிலத்தின் ஆளும்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் விமர்சித்துள்ளது. “யோகி ஆதித்யநாத்தை பொறுத்தவரை உ.பி.யை மாற்றுவது என்பது மேற்கு வங்கத்தில் மம்தாவின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கட்டிங்களின் புகைப்படத்தை திருடி, தங்களுடையது போல் பயன்படுத்திக்கொள்வது. பாஜகவின் வலிமையான மாநிலத்தின் அக்கட்சியின் இரட்டை இஞ்சின் முறை தோல்வி அடைந்துள்ளது. தற்போது இது அனைவருக்கும் வெளிச்சமாகியுள்ளது” திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

     

    இதையும் படிங்க: ரயில் பெட்டிகளும் விற்பனைக்கு... சுற்றுலாத் துறையை மேம்படுத்த மத்திய அரசின் திட்டம்!


    மேற்குவங்க நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் ஃபிர்ஹாத் ஹக்கீம், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகுவா மொய்த்ரா உட்பட பலரும் தங்களது விமர்சனத்தை சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளனர்.



    இதேபோல், உத்தரப் பிரதேசத்தின் எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி, “ முதலமைச்சரின் பொய் மீண்டும் அம்பலமாகியுள்ளது. விளம்பரத்தில் காட்டும் அளவில் எந்த பணிகளுமே நடைபெறவில்லை. பொய் கூறுவதில் பாஜக அரசு முதலில் உள்ளது’ என்று விமர்சித்துள்ளது.

     

    மேலும் படிக்க: போலி ஆவணங்கள் மூலம் இட ஒதுக்கீடு: நீதிபதி நிரந்தர பணி நீக்கம்!


    விளம்பரத்தில் தவறே இருந்தாலும் இது தொடர்பாக நீதிமன்றத்தை தான் நாடவேண்டும். சமூக வலைதளத்தில் கூச்சல் போடக்கூடாது என்று மேற்கு வங்க பாஜக தெரிவித்துள்ளது. இதனிடையே, விளம்பரத்தில் இடம்பெற்ற படம் தொடர்பாக தவறு நடந்துவிட்டதாகவும், தங்களின் டிஜிட்டல் பதிப்பில் இருந்து இதனை நீக்கிவிட்டதாகவும் விளம்பரத்தை வெளியிட்ட அங்கில ஊடகம் விளக்கமளித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Murugesh M
    First published: