HOME»NEWS»NATIONAL»adhir to mamata join cong to defeat bjp aru

மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வருவதை தடுக்க மம்தா பானர்ஜி காங்கிரஸில் இணைய வேண்டும்- ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

காங்கிரஸ், இடதுசாரிகள் போன்ற மதச்சார்பற்ற கட்சிகளை நீங்கள் (மமதா பானர்ஜி) வலுவிழக்கச் செய்ததன் பலனாக இன்று பாஜக மேற்கு வங்கத்தில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது.

மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வருவதை தடுக்க மம்தா பானர்ஜி காங்கிரஸில் இணைய வேண்டும்- ஆதிர் ரஞ்சன் சவுத்ரி
காங்கிரஸ், இடதுசாரிகள் போன்ற மதச்சார்பற்ற கட்சிகளை நீங்கள் (மமதா பானர்ஜி) வலுவிழக்கச் செய்ததன் பலனாக இன்று பாஜக மேற்கு வங்கத்தில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது.
  • Share this:

மேற்குவங்க மாநிலத்தில் எதிர் வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த மம்தா பானர்ஜி இன்றே திரிணாமுல் காங்கிரஸை விட்டுவிட்டு காங்கிரஸில் இணைய வேண்டும் என அம்மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவரும், லோக்சபா காங். தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியிருக்கிறார்.

மேற்குவங்க மாநிலம், நார்த் 24 பர்கனாஸ் மாவட்டத்தின் பராசாத் எனும் இடத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், “2011ம் ஆண்டில் காங்கிரஸின் உதவியுடன் தான் மம்தா பானர்ஜியும், திரிணாமுல் காங்கிரஸும் ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால் அதிகாரத்திற்கு வந்த பின்னர் காங்கிரஸ் கட்சியை உடைத்து அதனை நசுக்க வேண்டும் என மம்தா எண்ணினார்.





தற்போது மாநிலத்தில் பாஜக வளர்ந்து வருகிறது. இதற்காக எங்களிடம் மம்தா பானர்ஜி ஆதரவு கோருகிறார். அதற்கு பதிலாக பாஜகவை ஆட்சிக்கு வராமல் தடுக்க காங்கிரஸில் இன்றே மம்தா இணைய வேண்டும், எங்கள் துணையில்லாமல் பாஜக ஆட்சிக்கு வருவதை அவரால் தடுக்க முடியாது.

காங்கிரஸ், இடதுசாரிகள் போன்ற மதச்சார்பற்ற கட்சிகளை நீங்கள் (மம்தா பானர்ஜி) வலுவிழக்கச் செய்ததன் பலனாக இன்று பாஜக மேற்கு வங்கத்தில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது.

காங்கிரஸின் துணை இல்லாமல் பாஜகவை எதிர்க்க முடியாது என்பதை இப்போது நீங்கள் (மம்தா பானர்ஜி) உணர்ந்திருப்பீர்கள் என நம்புகிறேன் என ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறினார்.



மேலும் அவர் கூறுகையில், இந்தியாவில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜக போன்ற கட்சிகளை எதிர்த்து போரிட்டு காங்கிரஸ் தனியாகவே மதச்சார்பற்ற சூழலை இந்தியாவில் தக்க வைத்திருக்கிறது. வரலாறே இதற்கு சாட்சி என ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்தார்.

இன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக ஆளுநர் மாளிகை அருகே பிரச்சாரம் மேற்கொள்கிறோம், திரிணாமுல் காங்கிரஸின் அனைத்து பிரதிநிதிகளும் அங்கு வந்து காங்கிரஸின் தலைமையில் ஒன்று திரண்டு ஆதரவு தர வேண்டும். மமதா பானர்ஜிக்கு இதைவிட்டால் வேறு வழியில்லை என சவுத்ரி குறிப்பிட்டார்.
Published by:Arun
First published: