ராகுல் காந்தி மறுப்பு! மக்களவையின் காங்கிரஸ் தலைவராக அதிர் ரஞ்சன் சவுத்ரி தேர்வு

இன்று காலை முதலே காங்கிரஸின் மூத்தத் தலைவர் சோனியா காந்தி உடன் ராகுல் காந்தியும் இன்னும் சில மூத்தத் தலைவர்களும் இணைந்து கலந்து ஆலோசித்தனர்.

ராகுல் காந்தி மறுப்பு! மக்களவையின் காங்கிரஸ் தலைவராக அதிர் ரஞ்சன் சவுத்ரி தேர்வு
அதிர் ரஞ்சன் சவுத்ரி
  • News18
  • Last Updated: June 18, 2019, 3:28 PM IST
  • Share this:
மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக மூத்த எம்.பி அதிர் ரஞ்சன் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

17-வது மக்களவையின் காங்கிரஸ் கட்சித் தலைவராக அதிர் ரஞ்சன் சவுத்ரி அக்கட்சியின் சார்பாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மக்களவையின் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பதவி ஏற்க மறுத்துவிட்டார். இதனால் மூத்த எம்.பி ஆன அதிர் ரஞ்சன் சவுத்ரி பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை முதலே காங்கிரஸின் மூத்தத் தலைவர் சோனியா காந்தி உடன் ராகுல் காந்தியும் இன்னும் சில மூத்தத் தலைவர்களும் இணைந்து கலந்து ஆலோசித்தனர். இதன் பின்னரே அதிர் ரஞ்சன் சவுத்ரி மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.


இன்று, இதுகுறித்த காங்கிரஸ் கட்சியின் பரிந்துரைக் கடிதம், மக்களவை சபாநாயகரிடம் கட்சி சார்பில் அளிக்கப்பட்டது. இனி வரும் காலங்களில் கட்சியின் சார்பாக அனைத்துக் கூட்டங்களிலும் கமிட்டி கூட்டங்களிலும் அதிர் ரஞ்சன் சவுத்ரியே பங்கேற்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: மக்களவை சபாநாயகராக பாஜக எம்.பி ஓம் பிர்லா..?
First published: June 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading