Home /News /national /

பிரயாக்ராஜில் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக கூடுதல் பாதுகாப்பு

பிரயாக்ராஜில் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக கூடுதல் பாதுகாப்பு

பிரயாகராஜில் குவிக்கப்படும் பாதுகாப்புப்படை

பிரயாகராஜில் குவிக்கப்படும் பாதுகாப்புப்படை

Additional protection in prayagraj : முகமது நபிகளுக்கு எதிரான பா. ஜ.க உறுப்பினருக்கு எதிரான கடந்த வெள்ளி அன்று நிகழ்ந்த போராட்டத்தால் பிரயாக்ராஜில் இன்றைய வெள்ளிக்கிழமை தொழுகைக்காக கூடுதல் பாதுகாப்பு

முஹம்மது நபியைப் பற்றி இடைநீக்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் (BJP) தலைவர் நூபுர் சர்மாவின் கருத்துக்களால் நாட்டின் பல பகுதியில் போராட்டங்கள் நடந்து வருகிறது. கடந்த ஜூன் 10 அன்று வெள்ளிக்கிழமை தொழுகையைத் தொடர்ந்து வன்முறை வெடித்தது.இது நடந்து ஒரு வாரத்திற்குப் பிறகு,இன்று நடைபெற இருக்கும் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக பிரயாக்ராஜின் அட்டாலா மற்றும் அண்டை பகுதிகளில் கலவர தடுப்புக் காவலில் கூடுதல் போலீஸ் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

கான்பூர், பிரயாக்ராஜ் மற்றும் சஹாரன்பூரில் நபிகள் நாயகத்தைப் பற்றிய கருத்துக்களுக்கு எதிரான போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் குறைந்தது 49 பேர் காயமடைந்ததைத் தொடர்ந்து குறைந்தது நான்கு கட்டிடங்கள் இடிக்கப்பட்டன.

முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உள்ள பெரும்பாலான கடைகள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் மூடப்பட்டுள்ளன. நான்கு பேருக்கு மேல் கூடுவதற்கு அதிகாரிகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அத்தியாவசியப் பொருட்களை வாங்க மட்டுமே வெளியில் செல்வதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

மூத்த போலீஸ் சூப்பிரண்டு அஜய் குமாருடன் அப்பகுதியை பார்வையிட்ட மாவட்ட நீதிபதி சஞ்சய் குமார் காத்ரி, நிலைமை தொடர்ந்து சீராக உள்ளது.அமைதியைப் பேணுமாறு நாங்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளோம் என்றார்.

அக்னிபாத் எதிரான போராட்டத்தில் பீகாரில் 3 ரயில் பெட்டிகள் எரிப்பு

20 மண்டல மாஜிஸ்திரேட்களையும், பழைய நகரப் பகுதியின் நான்கு காவல் நிலையப் பகுதிகளுக்கு தலா ஐந்து பேரையும், ஒவ்வொரு ஸ்டேஷனுக்கும் தலா 12 துறை மாஜிஸ்திரேட்களையும் நியமித்துள்ளனர். இரண்டு கூடுதல் துறை மாஜிஸ்திரேட்டுகள் அண்டை பகுதிகளுக்கு நியமித்துள்ளனர். 50 செக்டார் மாஜிஸ்ட்ரேட்டுகள் பணியில் உள்ளனர்.

300 கும் அதிகமான சிசிடிவி கேமெராக்கள் கண்காணிப்புப் பணிக்காக பொருத்தப்பட்டுள்ளன. 4 டிரோன் கேமெராக்களும் பயன்படுத்தப்பட உள்ளது. ஆங்காகே கண்காணிப்புக்கு குழுக்களும் நிறுத்தப்பட்டுள்ளது. பொது மக்களும் கலகம் செய்யும் நபர்களை பற்று காவல் துறைக்கு தகவல் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. தொழுகையின் போதும், தொழுகை முடித்த பின்னரும் மக்கள் போராட்டங்களில் ஈடுபடாமல் இருக்கவும், கலவரங்கள் நிகழாமல் தடுக்கவும், மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகக் கூறுகின்றனர்.

ஏற்கனவே அக்னிபாத் போராட்டங்களும் நடந்து வரும் நிலையில், தொழுகையின் போது எந்த அசம்பாவிதங்களும் நடக்காமல் பாதுகாக்க காவல் துறை முயற்சித்து வருகிறது.

 
Published by:Ilakkiya GP
First published:

Tags: BJP, Prayagraj, Protest

அடுத்த செய்தி