Home /News /national /

ஆணுறைக்கு அடிமையான இளைஞர்கள்.. போதை பழக்கத்திற்கு பயன்படுத்துவதால் பரபரப்பு

ஆணுறைக்கு அடிமையான இளைஞர்கள்.. போதை பழக்கத்திற்கு பயன்படுத்துவதால் பரபரப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

துர்க்காபூர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி இளைஞர்கள் பலர் வரிசை கட்டி காண்டம் பாக்கெட்டுகளை வாங்கி கடைகாரர்களை திக்குமுக்காட வைத்துள்ளனர்.

    மக்கள் விதவிதமான பொருள்கள் பழக்கங்களுக்கு அடிமையாவது வாடிக்கை என்ற நிலையில், ஒரு பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் திடீரென்று காண்டம்(ஆணுறைக்கு) அடிமையாகியுள்ளனர். மேற்கு வங்கம் மாநிலம் துர்காபூர் பகுதியில் உள்ள கடை ஒன்றில் நாள்தோறும் 3 அல்லது 4 பாக்கெட் காண்டங்களே விற்பனையாகி வந்த நிலையில், தற்போது ஒரே நாளில் 30 முதல் 40 காண்டம் பாக்கெட்டுகள் விற்பனை ஆகி பரபரப்பை கிளப்பியுள்ளது.

    அப்பகுதியைச் சேர்ந்த கல்லூரி இளைஞர்கள் பலர் வரிசை கட்டி காண்டம் பாக்கெட்டுகளை வாங்கி கடைகாரர்களை திக்குமுக்காட வைத்துள்ளனர். இது என்ன திடீர் மாற்றம் என யோசித்து இளைஞர்கள் இடமே கடையின் உரிமையாளர்கள் இதற்கான காரணத்தை கேட்டுள்ளனர்.அதற்கு இளைஞர்கள் இந்த காண்டங்களுக்கு நாங்கள் அடிக்ட் (அடிமை) ஆகியுள்ளோம் என அதிர வைக்கும் தகவலை தெரிவித்துள்ளனர்.

    இதைக் கேள்வி பட்ட அப்பகுதி வாசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், துர்காப்பூர் அரசு மருத்துமனையை சேர்ந்த தீமன் மண்டல் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், காண்டங்களில் வாசனைக்காக ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. இவை ஆல்கஹால் வேதியல் தன்மைகளை கொண்டவை. எனவே, இதை சுடு நீரில் வைத்து கலந்துவிடும் போது ஒருவித போதை உணர்வை தரும் என்பதால் இந்த வினோத போதை பழக்கத்திற்கு துர்காப்பூர் பகுதி இளைஞர்கள் அடிமையாகியுள்ளனர்.

    இதையும் படிங்க: தலித் என்பதால் அதிகாரிகள் மதிப்பதில்லை.. பதவியை ராஜினாமா செய்த அமைச்சர்

    உலகில் ஏற்கனவே இது போன்ற வினோத அடிமை பழக்கங்கள் நடைபெற்று தான் வருகின்றன. நைஜீரியா நாட்டில் டூத் பேஸ்ட், ஷூ இங்க் ஆகியவற்றுக்கு இளைஞர்கள் அடிமையானதால் வழக்கத்தை விட இந்த பொருள்கள் ஆறு மடங்கு அதிகம் விற்பனையாகி பரபரப்பை கிளப்பியது. அதேபோல், ஹேர் க்ரீம், பேஸ்வாஷ் போன்றவற்றுக்கும் சிலர் அடிமையாகிய செய்திகளும் வந்துள்ளன.
    Published by:Kannan V
    First published:

    Tags: Alcohol, Condom, Sales

    அடுத்த செய்தி