ஆன்லைன் ரம்மிக்கு அடிமை - வாடிக்கையாளர்களின் பணத்தை திருடிய வங்கி கேஷியர்

பொழுது போக்காக ரம்மி விளையாடுவது என்பது வேறு; அதையே முழு நேரமாக வைத்திருந்த ரவி தேஜாவின் வாழ்க்கையின் முடிவு பலருக்கும் நல்ல உதாரணம்.

ஆன்லைன் ரம்மிக்கு அடிமை - வாடிக்கையாளர்களின் பணத்தை திருடிய வங்கி கேஷியர்
News 18
  • News18
  • Last Updated: June 4, 2020, 10:45 PM IST
  • Share this:
ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள நுழிவீடு பகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை ஒன்றில், முதன்மை கேஷியராக பணியாற்றிவரும் குந்த்ரா ரவி தேஜா, நண்பர் ஒருவர் மூலம் இவர் ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார். சில நாட்களில், வேலையை விட்டு விட்டு ரம்மியில் மூழ்கியுள்ளார்

தனது வங்கி கணக்கில் உள்ள தொகையைக் கொண்டு ரம்மி விளையாடி வந்துள்ளார். தகவல் அறிந்த குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதனால், வங்கிப் பணியின் போது ரம்மி ஆட்டத்தை போட்டு, அலுவலகத்தையே ரணகளப்படுத்தி வந்துள்ளார் ரவி தேஜா.

ஒரு கட்டத்தில், தனது கையிருப்பு கரைந்து போனதால், வங்கி வாடிக்கையாளர்களின் வைப்புக் கணக்கில் கை வைக்கத் தொடங்கினார் ரவி தேஜா. கொஞ்சம் கொஞ்சமாக வாடிக்கையாளர்களின் நிரந்தர சேமிப்பு வங்கி கணக்கிலிருந்து தனது கணக்கிற்கு பணத்தை மாற்றி ரம்மி விளையாடும் அளவுக்கு அடிமையாகிப் போனார்.


நிரந்தர சேமிப்பு தொகையில் மாறுபாடு ஏற்படுவதாக வாடிக்கையாளர்களின் புகாரையடுத்து, ஆய்வு மேற்கொண்ட உயர் அதிகாரிகளிடம் முதன்மை கேஷியர் ரவி தேஜா மாட்டிக்கொண்டார். விசாரணையில், ஒரு கோடியே, 56 லட்சம் வரை ரொக்கத்தை கேஷியர் கையாடல் செய்தது உறுதியானது; இதையடுத்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

குற்றத்தை ஒப்புக்கொண்ட கேஷியர் ரவி தேஜாவை ஆந்திர போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Also See: சீனாவைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்..? உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்
First published: June 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading