ஹோம் /நியூஸ் /இந்தியா /

"130 கோடி இந்தியர்களின் விருப்பம்... ரூபாய் நோட்டுகளில் லக்ஷ்மி, விநாயகர் படங்கள் வேண்டும்"..அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமருக்கு கடிதம்

"130 கோடி இந்தியர்களின் விருப்பம்... ரூபாய் நோட்டுகளில் லக்ஷ்மி, விநாயகர் படங்கள் வேண்டும்"..அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமருக்கு கடிதம்

டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால்

டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால்

ஒருபக்கம், நாட்டு மக்களாகிய நாம் அனைவரும் கடினமாக உழைத்து வந்தாலும், மறுபக்கம் நமது முயற்சிகள் பலனளிக்க கடவுளின் ஆசியும் தேவை என கெஜ்ரிவால் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Delhi, India

  புதிதாக அச்சிடப்படும் ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்துடன் லட்சுமி, விநாயகர் படங்களையும் சேர்க்க வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சில நாள்களுக்கு முன்னர் கோரிக்கை வைத்தார். இந்நிலையில்,இந்த கோரிக்கை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

  அக்கடிதத்தில் முதலமைச்சர் கெஜ்ரிவால் கூறியதாவது," இந்தியா விடுதலை அடைந்து தற்போது 75 ஆண்டுகள் ஆகியுள்ளது. இருந்த போதிலும், இந்தியப் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையை நோக்கிதான் தற்போது சென்றுகொண்டிருக்கிறது. மேலும், இந்தியா இன்னும் ஏழை மற்றும் வளரும் நாடுகளின் பட்டியலில்தான் இருக்கிறது.

  ஒருபக்கம், நாட்டு மக்களாகிய நாம் அனைவரும் கடினமாக உழைத்து வந்தாலும், மறுபக்கம் நமது முயற்சிகள் பலனளிக்க கடவுளின் ஆசியும் தேவை. சரியான கொள்கை, கடின உழைப்பு மற்றும் கடவுளின் ஆசி ஆகியவற்றின் மூலம் மட்டுமே நாடு முன்னேற்றம் பெறும்.

  எனவே, இனி அச்சிடப்படும் புதிய ரூபாய் நோட்டுகளில் ஒருபுறம் மகாத்மா காந்தியின் படத்தை வைத்துவிட்டு, மறுபுறம் லட்சுமி, விநாயகரின் படங்களைச் சேர்க்க வேண்டும். இது 130 கோடி இந்தியர்களின் விருப்பமாகும். எனது கோரிக்கைக்கு மக்கள் மத்தியில் தற்போது மிகப்பெரிய ஆதரவு கிடைத்துள்ளது. பெரும் உற்சாகம் ஏற்பட்டிருக்கிறது.எனவே, எனது கோரிக்கையான இதை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

  இதையும் படிங்க: 15 வயதுக்கு மேற்பட்ட இஸ்லாமிய பெண்ணின் திருமணம் குழந்தை திருமணம் ஆகாது- உயர் நீதிமன்றம் தீர்ப்பு

  விரைவில் குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஆம் ஆத்மி மிகுந்த உத்வேகத்துடன் களம் காண்கிறது. ஆம் ஆத்மி கட்சி இந்துக்களுக்கு விரோதமான கட்சி என பாஜக தேர்தலுக்கு முன்னதாக பரப்புரை செய்தத் தொடங்கியுள்ளது. இதை சமாளிக்க தான் அரவிந்த் கெஜ்ரிவால் இது போன்ற அதிரடி கோரிக்கை வைத்து வருகிறார் என பாஜக உள்ளிட்ட பிற கட்சிகள் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றன.

  Published by:Kannan V
  First published:

  Tags: Arvind Kejriwal, Indian Rupee, PM Modi