சசிகலாவிற்கு கடுமையான நுரையீரல் தொற்று: மருத்துவ அறிக்கை வெளியீடு

சசிகலா

சசிகலாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

 • Share this:
  சசிகலாவிற்கு கொரோனா தொற்று இருப்பதை பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் உறுதிப்படுத்திய நிலையில், அவருக்கு கடுமையான நுரையீரல் தொற்று இருப்பதாகவும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  சொத்துகுவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த சசிகலாவுக்கு புதன்கிழமை காய்ச்சலுடன் மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பெங்களுரு அரசு பவுரிங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு நீரிழிவு, தைராய்டு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்கெனவே இருப்பதாகவும் அவரது உடலில் ஆக்சிஜன் அளவு 80 சதவீதத்துக்கு குறைவாக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.   

  இந்நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து ஆக்சிஜன் உதவியுடன் சசிகலாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சிடி ஸ்கேன் பரிசோதனைக்காக விக்டோரியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு எடுக்கப்பட்ட சிடி ஸ்கேனில் தொற்று இருப்பதும் நுரையீரலில் பாதிப்பும் உறுதி செய்யப்பட்டது.

  மேலும் படிக்க.... சசிகலாவுக்கு கொரோனா தொற்று

  இதனைத் தொடர்ந்து சசிகலாவிற்கு மீண்டும் ஆர்டி பிசிஆர் சோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. வருகிற 27 அன்று விடுதலை ஆக இருந்த நிலையில், சசிகலாவுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

  சசிகலாவிற்கு கடுமையான நுரையீரல் தொற்று இருப்பதை உறுதி செய்துள்ள மருத்துவமனை, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Published by:Suresh V
  First published: