சீனாவே ஒதுக்கிய சீன மருத்துவ முறை... மோடியின் ‘அக்குபிரஷர் ரோலர்’ பயன் என்ன?

உடல்நலத்தை சீர்படுத்த உதவும் என அக்குபிரஷர் ரோலர் முறையை சீனர்களே கைவிட்டு நாளாகிவிட்டது.

சீனாவே ஒதுக்கிய சீன மருத்துவ முறை... மோடியின் ‘அக்குபிரஷர் ரோலர்’ பயன் என்ன?
அக்குபிரஷர் ரோலர் (கோப்புப்படம்)
  • News18
  • Last Updated: October 15, 2019, 8:52 PM IST
  • Share this:
பிரதமர் மோடி தனது மாமல்லபுரம் கடற்கரை நடைபயிற்சியின் போது பயன்படுத்திய அக்குபிரஷர் ரோலர் என்னும் சீன மருத்துவ முறை சீனர்களாலே புறந்தள்ளப்பட்டுள்ள ஒரு நடைமுறை ஆகும்.

பிரதமர் மோடி கையில் வைத்து உருட்டிய அக்குபிரஷர் ரோலர் கடந்த மூன்று நாட்களாக பிரபலமடைந்து காணப்படுகிறது. மோடியும் இதுகுறித்த விளக்கத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அக்குபிரஷர் மற்றும் அக்குபஞ்சர் முறை என்பது சீனாவில் தோன்றிய ஒரு வகை மருத்துவ முறை ஆகும்.

உடலில் உள்ள ஆற்றலை சீர்படுத்தி செயல்படுத்தும் ஒரு வகை மருத்துவம் என அறியப்படுகிறது. உடலில் உள்ள ஆற்றல் தடுப்புகளை சீர்செய்ய இந்த அக்குபிரஷர் அல்லது அக்குபஞ்சர் மருத்துவ முறை உதவும் எனக் கூறப்படுகிறது. உடலின் ஒரு பகுதியில் தரப்படும் அழுத்தம் மூலம் இம்முறை செயல்படுத்தப்படுகிறது.


உடல்நலத்தை சீர்படுத்த உதவும் என அக்குபிரஷர் ரோலர் முறையை சீனர்களே கைவிட்டு நாளாகிவிட்டது. அறிவியல் மருத்துவ முறைகள் இம்முறையை ஆதரிக்கவில்லை.

Also see:

First published: October 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...