தேர்வு முடிவுகள் வெளியிட்டதில் குளறுபடி; 21 மாணவர்கள் தற்கொலை! தெலங்கானாவில் பரபரப்பு

தேர்வை எதிர் கொண்ட 9 லட்சம் மாணவர்களில் 3 லட்சம் பேர் வரை தோல்வியடைந்தனர் என்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

தேர்வு முடிவுகள் வெளியிட்டதில் குளறுபடி; 21 மாணவர்கள் தற்கொலை! தெலங்கானாவில் பரபரப்பு
பெற்றோர்கள் போராட்டம்
  • News18
  • Last Updated: April 28, 2019, 7:35 PM IST
  • Share this:
தெலங்கானா மாநிலத்தில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதில் பல குளறுபடிகள் நடைபெற்றுள்ளதால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தெலங்கானா மாநிலத்தில் 12-ம் வகுப்பு தேர்வு எழுதியவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஏப்ரல் 18-ம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

இந்தத் தேர்வு முடிகளை, தெலங்கானா மாநில கல்வி வாரியத்துடன் இணைந்து, க்ளோபியர்னா டெக்னாலஜி என்ற தனியார் நிறுவனமும் கையாண்டது. தேர்வை எதிர் கொண்ட 9 லட்சம் மாணவர்களில் 3 லட்சம் பேர் வரை தோல்வியடைந்தனர் என்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.


மேலும், தேர்வு முடிகளில் வெளிப்படையாக பல்வேறு குளறுபடிகள் இருந்துள்ளது. 11-ம் வகுப்பில் சிறப்பான மதிப் பெண்கள் பெற்றிருந்த மாணவர்களுக்கு இந்தமுறை ஒற்றையிலக்க மதிப்பெண்களே கிடைத்துள்ளது. அது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், தேர்வு எழுதியிருந்த மாணவர்கள் பலருக்கு தேர்வு எழுதவில்லை என்று பதிவாகியிருந்துள்ளது.

காரிமல்லா ஜூனியர் கல்லூரியைச் சேர்ந்த மாணவி கஜ்ஜா நவ்யா. அவர், தெலுங்கு பாடத்தில் 0 மதிப்பெண் பெற்று தோல்வியடைந்ததாக தேர்வு முடிவு வெளியானது. அவர், கடந்த வருடம் அதே பாடத்தில் 98 மதிப்பெண் பெற்றவர். அந்தப் பாடத்தில் மறு கூட்டல் நடைபெற்ற பிறகு, அவருக்கு 99 மதிப்பெண் அளிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதிய ஏராளமான மாணவர்களுக்கு தேர்வு எழுதவில்லை(absent) என்று தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளது.

இதற்கு மத்தியில் தோல்வியடைந்தவர்களில் 21 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்வு முடிவுகள் குளறுபடியாக வெளிவந்ததைக் கண்டித்து மாணவர்களும் பெற்றோர்களும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Loading...

இதுகுறித்து விளக்கமளித்துள்ள தெலங்கானா கல்வித்துறை செயலாளர் ஜனார்தன் ரெட்டி, ‘தேர்வு முடிவுகள் வெளியிடும் முறையில் சில தவறுகள் நடைபெற்றுள்ளது. தவறுக்கு காரணமான தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தார். மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பதற்கு இலவசம் என்று அம்மாநில முதலவர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

மாநில கல்வித்துறை அமைச்சர் ஜெகதீஷ் ரெட்டி பதவி விலக வேண்டும் என்று எதிர் கட்சிகள் வலியுறுத்திவருகின்றன. தேர்வு முடிவுகளை கையாண்ட க்ளோபியர்னா நிறுவனத்துக்கு இந்த விவகாரத்தில் முன் அனுபவம் கிடையாது. இந்தச் சம்பவத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும்’ என்று தெலங்கா காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see:

First published: April 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...