ஹோம் /நியூஸ் /இந்தியா /

''நடிகை கரீனா கபூரின் மகன் பெயர் என்ன?'' பள்ளி மாணவர்களின் பொது அறிவுத் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி

''நடிகை கரீனா கபூரின் மகன் பெயர் என்ன?'' பள்ளி மாணவர்களின் பொது அறிவுத் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி

மாவட்ட தலைமை கல்வி அதிகாரி, சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியிடம் விசாரணை நடத்தினார். விரைவில் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

நடிகை கரீனா கபூரின் மகன் பெயர் என்ன என்று பள்ளி மாணவர்களின் பொது அறிவு பாடத்தில் கேள்வி கேட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

மத்திய பிரதேச மாநிலம் கந்த்வா மாவட்டத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு, 6-ம் வகுப்பு மாணவர்களுக்காக தேர்வு நடத்தியுள்ளனர். அவர்களின் பொது அறிவு வினாத்தாளில் கேட்கப்பட்ட கேள்வி, நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, 'நடிகை கரீனா கபூர் - நடிகர் சைஃப் அலி கானின் மகனுடைய முழுப் பெயரை எழுதுக?' என்று அந்த கேள்வி அமைந்திருந்தது. இதைப் பார்த்த மாணவர்களின் பெற்றோர், பள்ளி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்தனர்.

இதையும் படிங்க : கேரளா சேலையில் மிர்ரர் செல்ஃபி பதிவிட்ட அஜித் பட நடிகை..

சமூக வலைதளங்களில் இந்த விஷயம் பரவியதால் பள்ளியின் பெயர் டேமேஜ் ஆகத் தொடங்கியது. வினாத்தாளை போட்டோ எடுத்து நெட்டிசன் வைரலாக்கி இருந்தனர். இதையடுத்து மாவட்ட தலைமை கல்வி அதிகாரி, சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியிடம் விசாரணை நடத்தினார். விரைவில் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : அடியே சக்கரகட்டி! ஆத்மிகாவின் அழகிய படங்கள்..

பொது அறிவு தாளில் கேட்கப்பட்ட நடிகை கரீனா கபூரின் மகனின் முழுப் பெயர் என்ன என்பதை கூகுளில் தேடிப்பார்த்தோம். விடை 'தைமூர் அலி கான்' என வந்துள்ளது.

இதையும் படிங்க : பொன்னியின் செல்வன் படம் குறித்த புதிய அப்டேட்..

First published:

Tags: Actress Kareena kapoor