நடிகை விஜயசாந்தி நாளை பாஜகவில் இணைகிறார்?

நடிகை விஜயசாந்தி நாளை பாஜகவில் இணைகிறார்?

நடிகை விஜயசாந்தி நாளை பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 • Last Updated :
 • Share this:
  தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஆக்ஷ்ன் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் நடிகை விஜயசாந்தி. அதன்பின் அரசியலில் நுழைந்த அவர் 'தல்லி தெலங்கானா' என்னும் தனிக்கட்சியை தொடங்கினார். அதன்பின் அதை கலைத்துவிட்டு பாஜகவில் இணைந்தார். இதையடுத்து பாஜகவிலிருந்து விலகி தெலங்கானா ராஷ்டிர சமிதியில் இணைந்தார். ஆனால் அந்த கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவிற்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு வந்ததால், டிஆர் எஸ் கட்சியிலிருந்து விஜயசாந்தி விலகினார்.

  அதன்பின் காங்கிரஸ் கட்சியின் பிரச்சார குழு தலைவராக செயல்பட்ட விஜயசாந்தி, சமீபத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டியை சந்தித்து 2 முறை பேச்சு வார்த்தை நடத்தினார்.

  இந்நிலையில் நாளை டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அக்கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vijay R
  First published: