ஜெகன்மோகன் ரெட்டியின் வெற்றிக்கு உறுதுணையாக நின்ற ரோஜா கடந்து வந்த அரசியல் பாதை!

சந்திரபாபு நாயுடுவே ரோஜாவின் வெற்றிக்கு எதிராகச் செயல்பட்டார், அதாவது ரோஜா பிரச்சாரத்திற்கு கூட உடன் செல்வதற்கு கட்சியினர் யாரையும் அனுப்பவில்லை. இதனால் மிகவும் வருத்தப்பட்டார் ரோஜா. அந்த தேர்தலில் படுதோல்வி அடைந்தார்.

Web Desk | news18
Updated: May 28, 2019, 5:12 PM IST
ஜெகன்மோகன் ரெட்டியின் வெற்றிக்கு உறுதுணையாக நின்ற ரோஜா கடந்து வந்த அரசியல் பாதை!
ரோஜா & ஜெகன் மோகன் ரெட்டி
Web Desk | news18
Updated: May 28, 2019, 5:12 PM IST
தெலுங்கானாவில் ஜெகன்மோகன் ரெட்டியின் வெற்றிக்கு நடிகை ரோஜாதான் காரணமா? ஆம்,  ஜெகன்மோகன் ரெட்டியின் பின்னணியும், நடிகை ரோஜாவின் பின்னணியும் ஒரு வகையில் ஒரே மாதிரிதான் இருக்கும். இதனால்தான் என்னவோ இருவரும் இணைந்து மாபெரும் வெற்றியை கொடுத்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் 90 காலக்கட்டங்களில் ரஜினி, கார்த்தி, சரத்குமார், பிரபு என முக்கிய ஹீரோக்களுடன் பல வெற்றிப்படங்களில் நடித்து, அப்போதைய ரசிகர்களின் கனவு கன்னியாகவும், மக்களின் அபிமானத்தைப் பெற்றவர் நடிகை ரோஜா.

பின்னர், அரசியலில் சேர முடிவெடுத்த ரோஜா,


கடந்த 2000-ம் ஆண்டில் ஆந்திராவில் பிரபலமான தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து அக்கட்சியின் பணிகளைக் கவனித்து வந்தார். பிரச்சாரத்தில் ரோஜா அளவுக்கு பேசுவதற்கு யாரும் இல்லை என்று பெயரும் எடுத்தார். பிரச்சாரத்தில் மக்களை கவர்ந்தார்.

ஆனால், அக்கட்சியில் அவர் வளர்வது, சக உட்கட்சியினர் சிலருக்கு பிடிக்கவில்லை. அதனால், முன்னணி நடிகையான ரோஜாவின் வளர்ச்சி ஏறுமுகமாக இல்லை.

ஆனாலும் தன் தன்னம்பிக்கையால் அக்கட்சியில் குறுகிய காலத்தில் பிரபலமானார். அதனால் கடந்த 2009 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அவர் வேட்பாளராகவும் களமிறங்கினார்.

Loading...

அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவே ரோஜாவின் வெற்றிக்கு எதிராகச் செயல்பட்டார், அதாவது ரோஜா பிரச்சாரத்திற்கு கூட உடன் செல்வதற்கு கட்சியினர் யாரையும் அனுப்பவில்லை. இதனால் மிகவும் வருத்தப்பட்டார் ரோஜா. அந்த தேர்தலிலும் படுதோல்வி அடைந்தார்.

அந்த தோல்வி, ரோஜாவின் மனதில் ஆற்றுப்படுத்த முடியாத காயத்தை உண்டு பண்ணியது. தம் கட்சியினரே இதற்கு காரணம் என்று அறிந்துகொண்டார்.

இத்தனை சோதனையை சகித்தவர், இனி தான் இக்கட்சியில் தொடர்ந்தால் முன்னேற முடியாது என்பதைத் தீர்மானித்தார்.

அப்போது, அதே சமயத்தில் அங்கு வளர்ந்து கொண்டிருந்த ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சியான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணைந்துகொண்டார்.

விரைவில், அக்கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆலோசகராகவும் திகழ்ந்தார் ரோஜா. இவர்களுடைய அயராத உழைப்பு கட்சி தொண்டர்களை எழுச்சி அடையச் செய்தது.

ரோஜா தன்னுடன் இருப்பதை ஜெகன்மோகன் ரெட்டி பெரிய பலமாக நினைத்தார். 2014-ம் ஆண்டு நகரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட ரோஜா மாபெரும் வெற்றியும் பெற்றார்.

10 வருட தொடர் முயற்சியால் ஜெகன் மோகன் ரெட்டி தற்போது அம்மாநிலத்தின் ஆட்சியைப் பிடித்துள்ளார். அவரது ஆலோசகராக, திட்ட செயல்பாட்டாளராகவும் இருந்து வருகிறார் ரோஜா.

இதே 10 வருடங்களுக்கு முன்னர் ரோஜாவை தோல்வியடையச் செய்த சந்திரபாபு நாயுடு தற்போது நடிகை ரோஜாவின் வளர்ச்சியை கண்டு அதிர்ந்து போனார்.

Also Watch: நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த கேள்விக்கு வெய்ட் & சீ என பதிலளித்த மு.க.ஸ்டாலின்!

First published: May 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...