Home /News /national /

நடிகை ரோஜா முதன்முறையாக அமைச்சராக பதவியேற்றார்...

நடிகை ரோஜா முதன்முறையாக அமைச்சராக பதவியேற்றார்...

ரோஜா அமைச்சராக பதவியேற்பு

ரோஜா அமைச்சராக பதவியேற்பு

Actress Roja:  நகரி சட்டமன்ற உறுப்பினரும் நடிகையுமான  ரோஜா உட்பட 14 பேர் ஆந்திராவின் புதிய அமைச்சரவையில் இடம் பிடித்தனர். இவர்கள் அனைவரும் இன்று பதவியேற்றுகொண்டனர்.. ரோஜாவுக்கு சுற்றுலா, இளைஞர் நலன், கலை பண்பாடு ஆகிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மேலும் படிக்கவும் ...
    ஆந்திர அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்ட நிலையில், நடிகை ரோஜா முதன்முறையாக அமைச்சராக பதவியேற்றுகொண்டார். அவருக்கு ஆளுநர் பிஸ்வபூஷன் ஹரிசந்தன் பதவி பிரமாணம் செய்துவைத்தார்.

    இரண்டரை ஆண்டு காலத்திற்கு முன் ஆந்திர முதல்வராக பொறுப்பேற்ற முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தன்னுடைய அமைச்சரவையில் 24 அமைச்சர்களை நியமித்தார். அப்போது இரண்டரை ஆண்டுகளுக்கு பின்  அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும். மாற்றி அமைக்கப்படும் அமைச்சரவையில்  சிறப்பாக பணியாற்றிய அமைச்சர்களுக்கு மீண்டும் இடம் வழங்கப்படும் என்று கூறினார்.

    அதனடிப்படையில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் வேண்டுகோளுக்கு ஏற்ப  ஆந்திர அமைச்சர்கள் அனைவரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.  இதை தொடர்ந்து நேற்று புதிய அமைச்சர்களின் பட்டியல் வெளியானது.  நகரி சட்டமன்ற உறுப்பினரும் நடிகையுமான  ரோஜா உட்பட 15 பேர் புதிய அமைச்சரவையில் இடம் பிடித்தனர். பழைய அமைச்சரவையில் இருந்த 10 பேர் புதிய அமைச்சரவையிலும் இடம்பிடித்தனர்.



    நடிகை ரோஜா உட்பட அனைவரும் இன்று பதவியேற்றுகொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் பிஸ்வபூஷன் ஹரிசந்தன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டார்.  ரோஜா அமைச்சராக பதவியேற்றுகொண்டதையடுத்து அவரது ஆதரவாளர்களும், ரசிகர்களும் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.  ரோஜாவுக்கு சுற்றுலா, இளைஞர் நலன், கலை பண்பாடு ஆகிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Actress Roja, Andhra MLA, Andhra Pradesh

    அடுத்த செய்தி