நீர் மாசுபாடு குறித்து வித்தியாசமான விழப்புணர்வு ஏற்படுத்திய நடிகை ராஷ்மிகா!

நீர் மாசுபாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய முயற்சியைக் கையாண்டுள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

Web Desk | news18
Updated: December 14, 2018, 8:56 PM IST
நீர் மாசுபாடு குறித்து வித்தியாசமான விழப்புணர்வு ஏற்படுத்திய நடிகை ராஷ்மிகா!
நீர் மாசுபாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய முயற்சியைக் கையாண்டுள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா.
Web Desk | news18
Updated: December 14, 2018, 8:56 PM IST
நீருக்கு அடியில் போட்டோ ஷூட் நடத்தி நீர் மாசுபாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

இந்தியாவில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பல சட்டங்கள் இருந்தாலும் மாசுபாடுகளைக் குறைக்கவும் தடுக்கவும் எடுக்கப்படும் நடவடிக்கைகள் வெகு குறைவு தான். ஒவ்வொரு ஆண்டும் காற்று மாசுபாடால் டெல்லியில் மக்கள் வீட்டைவிட்டு வெளியேறவே தடை விதிக்கப்படும் சூழல் உள்ளது.

இதேபோல், பெங்களூருவில் உள்ள பெல்லாந்தூர் ஏரி நீர் மாசுபாடால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது நீரில் உள்ள ரசாயண மாசுபாடால் நுரை பொங்கி எழுவது வழக்கமாக உள்ளது. இந்த நீர் மாசுபாடு குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்த பெல்லாந்தூர் ஏரியில் மிகவும் ரிஸ்க் ஆன போட்டோ ஷூட் நடத்தி உள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கீதா கோவிந்தம் திரைப்படம் மூலம் பிரபலமானவர் ஆவர்.



சன்மதி பிரசாத் இந்த போட்டோ ஷூட்டை இயக்கி உள்ளார். இதுகுறித்து நடிகை ராஷ்மிகா தன் ட்விட்டர் பக்கத்தில், “அந்த ஏரிக்குச் செல்லும் வரையில் சூழ்நிலையின் வீரியம் எனக்குப் புரியாமல் தான் இருந்தது. இது என்னை மிகவும் நொறுக்கிவிட்டது. வருங்காலத்தை நினைத்துப் பாருங்கள்...” எனக் குறிப்பிட்டுள்ளார்.



மேலும் பார்க்க: திமுக-வை கேலி செய்த டிடிவி தினகரன்
Loading...
First published: December 14, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...