Home /News /national /

சுகேஷ் சந்திரசேகர் மோசடி வழக்கு..விசாரணை வளையத்தில் சிக்கிய பாகுபலி நடிகை

சுகேஷ் சந்திரசேகர் மோசடி வழக்கு..விசாரணை வளையத்தில் சிக்கிய பாகுபலி நடிகை

சுகேஷ்

சுகேஷ்

சுகேஷ் சந்திரசேகர் தொழிலதிபர் மனைவிடம் ரூ.215 கோடி மோசடி செய்த வழக்கில் ஜாக்குலின் புகாரை தொடர்ந்து நடிகை நோரா ஃபதேஹியும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Delhi, India
    இரட்டை இலை சின்னம் பெற்றுத் தருவதாகக் கூறி தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சிக்கி சிறை சென்றவர்தான் சுகேஷ் சந்திரசேகர். இவர் டெல்லி சிறையில் இருக்கும் போது ரான்பாக்சி நிறுவனத்தின் உரிமையாளர்களும் வழக்கு ஒன்றில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

    அவர்களை சிறையிலிருந்து வெளியே கொண்டு வருவதாகக் கூறி, ரான்பாக்சி (Ranbaxy Laboratories) மருந்து கம்பெனி உரிமையாளரின் மனைவியிடம் சிறையிலிருந்தவாறே செல்போனில் பேசி சுமார் ரூ.215 கோடி வரை மோசடி செய்தார் சுகேஷ். இந்த வழக்கை அமலாக்கத்துறை விசாரணைக்கு எடுத்த பின் சுகேஷுடன் தொடர்பு வைத்திருந்த பலர் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டனர்.

    அதில் சுகேஷுடன் தொடர்பில் இருந்த பாலிவுட் நடிகைகளான ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா ஃபதேஹி உள்ளிட்ட நடிகைகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது. நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசிடம் அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில், ரூ.7 கோடி மேல் பரிசுப் பொருட்களை வாங்கியது தெரியவந்தது. இதனால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது துணைக் குற்றப்பத்திரிகையில் ஜாக்குலின் பெயரும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தது.

    மேலும் சுகேஷ் சந்திரசேகரின் குற்றப் பின்னணியைத் தெரிந்தே நடிகை ஜாக்குலின் அவருடன் பழகினார் என்றும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியிருந்தது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டிருந்தது. சுகேஷ் சந்திரசேகரிடம் பாகுபலி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய நடிகை நோரா ஃபதேஹி உட்பட வேறு சில பிரபலங்களும் பரிசுப்பொருள்களை பெற்றுள்ளனர் என்பது ஏற்கெனவே விசாரணையில் தெரியவந்துள்ளது.

    நடிகை நோரா


    இதை சுட்டிக்காட்டி ஜாக்குலின் பெர்னாண்டஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், சுகேஷிடம் பரிசு பொருள்களை பெற்ற மற்றவர்களை சாட்சியாக சேர்த்துவிட்டு தன்னை மட்டும் குற்றவாளியாக சேர்த்து, பாரபட்சமாக விசாரிப்பதாக குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில்தான், வெள்ளிக்கிழமை டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நோராவிடம் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.

    இதையும் படிங்க: மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த கடத்தல் செம்மரக்கட்டைகளை ஏலம் விடும் ஆந்திர அரசு..

    சுகேஷ் சந்திரசேகருடனான தொடர்பு குறித்தும், அவரது குற்றப்பின்னணி குறித்தும் அவரிடம் கேட்டு பதிவு செய்து கொண்டனர். அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நோரா மற்றும் சுகேஷ் ஆகியோரிடம் ஏற்கெனவே விசாரணை நடத்தியுள்ளனர். 2020ஆம் ஆண்டு டிசம்பருக்கு முன்பு சுகேஷ் சந்திரசேகரிடம் பேசியதில்லை என்று விசாரணையின் போது நோரா தெரிவித்திருந்தார்.நோராவுக்கு சுகேஷ் பிஎம்டபியுள்யூ கார் பரிசாக வழங்கியதாகவும், ஆனால் அந்த காரை தான் பெற்றுக் கொள்ளவில்லை என்றும் நோரா தெரிவித்திருந்தார்.

    ஆனால் நோராவிடம் நேரடியாக கார் பரிசளித்ததாக சுகேஷ் சந்திரசேகர் விசாரணையில் தெரிவித்திருந்தார். இதுகுறித்தும் நோராவிடம் விசாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சுகேஷ் வழக்கில் நடிகைகள் அடுத்தடுத்து சிக்குவது பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Delhi, Enforcement Directorate

    அடுத்த செய்தி