Home /News /national /

தேர்தல் ரவுண்ட் அப் - காங்கிரஸ் கட்சிக்காக தீவிர பிரசாரத்தில் நக்மா

தேர்தல் ரவுண்ட் அப் - காங்கிரஸ் கட்சிக்காக தீவிர பிரசாரத்தில் நக்மா

நக்மா

நக்மா

பாட்ஷா, காதலன் போன்ற தமிழ்த் திரைப்படங்களால் தமிழக ரசிகர்களின் உள்ளங்களைக் கவர்ந்த நக்மா, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக உள்ளார். காங்கிரஸ் கட்சிக்காக ஆவேசமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
தமிழக ரசிகர்களை வசீகரித்திருந்த நடிகை நக்மா, இப்போது தன் அனல் பறக்கும் பேச்சால் வாக்காளர்களை கவர்ந்திழுத்து வருகிறார். காங்கிரஸ் நட்சத்திர பேச்சாளரான அவருக்கு அதிக கூட்டம் கூடுவதால் தேர்தல் பிரசாரத்திற்கு, காங்கிரஸ் கட்சியினர் அவரை போட்டி போட்டு அழைக்கின்றனர்.   

மத்திய பிரதேசத்தில், பாஜக-வினர், யோகி ஆதித்யநாத், ஸ்மிருதி இரானி போன்றோரை அழைத்து பிரசாரத்தில் ஈடுபடுத்தி வருகின்றனர். பதிலுக்கு சித்துவை அழைத்து வந்த காங்கிரஸ் தற்போது நடிகை நக்மாவை பிரசார களத்தில் இறக்கியுள்ளது.

பாட்ஷா, காதலன் போன்ற தமிழ்த் திரைப்படங்களால் தமிழக ரசிகர்களின் உள்ளங்களைக் கவர்ந்த நக்மா, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக உள்ளார்.

நக்மா ஒருபுறம் ஆவேசமாக முழங்கிக் கொண்டிருக்க, அவருடன் மேடையில் நின்றிருந்த தொண்டர்களோ அவரை மும்முரமாக செல்போனில் படமெடுத்துக்கொண்டிருக்கின்றனர். நக்மாவின் இந்த வசீகரம், காங்கிரசுக்கு ஓட்டாக மாறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

பாஜக தலைவர் அமித்ஷா, பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்க வரும்போது திடீரென தடுமாறி இடறும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர், தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களிலும் மாறி, மாறி பிரசாரம் செய்து வருதால், அது எங்கு நடந்தது எனத் தெரியாமலேயே பலராலும் பகிரப்பட்டுவருகிறது.



தெலங்கானாவில் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்த பாஜக வேட்பாளர் ஸ்வர்ணா ரெட்டி, தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜக சார்பில் நிர்மல் தொகுதியில் போட்டியிடுகிறார்.

அவர் வேட்புமனுத்தாக்கல் செய்யச் சென்றபோதும். பிரசாரத்திற்கு போனபோதும், அவரே எதிர்பார்க்காத அளவுக்கு கூட்டம் கூடுகிறது. அவரிடம் சிகிச்சை பெற்ற நூற்றுக்கணக்கானோர் குறிப்பாக, பெண்கள் திரண்டு வருவது பாஜக-வினருக்கே இன்ப அதிர்ச்சியாக இருக்கிறதாம்.

மத்திய பிரதேசத்தில் பாஜகவுக்கு எதிராக திரும்பியுள்ள சாமியார்கள் அக்கட்சிக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். அதில் பங்கேற்ற சிலர், குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தது கவனத்தைக் கவர்வதாக இருந்தது.

Also see...

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: 5 State Election, Nagma

அடுத்த செய்தி