தமிழில் பாட்ஷா, காதலன், லவ்பேர்ட்ஸ், சிட்டிசன் போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை நக்மா. தற்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து வரும் இவரிடம் ஆன்லைன் மோசடி கும்பல் ஒன்று ஒரு லட்சம் ரூபாய் பணத்தை மோசடியாக பறித்துள்ளது. 40க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள இந்த மெகா மோசடியில் நடிகை நக்மா சிக்கியது எப்படி..
மும்பையில் செயல்படும் தனியார் வங்கியின் பெயரில் வாடிக்கையாளர்கள் 40 பேருக்கு போலி குறுஞ்செய்தி ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.KYC மற்றும் PAN விவரங்களை புதுப்பிக்க அனுப்பப்பட்ட அந்த இணைப்பை கிளிக் செய்யுமாறு கேட்டு கொள்ளப்பட்டிருந்தது.இதனை நம்பிய வாடிக்கையாளர்களும் லிங்கை கிளிக் செய்ய, அடுத்தக் கணமே அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டது போல் குறுஞ்செய்திகள் அடுத்தடுத்து வர ஆரம்பித்தனமூன்று நாட்களுக்குள் லட்சக்கணக்கான ரூபாய் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் இருந்து திருடப்பட்டன.இந்த சம்பவம் தொடர்பாக மும்பை சைபர் கிரைம் போலீசாரிடம் புகார்கள் குவிந்த நிலையில், வழக்குப்பதிவு செய்து விசாணையைத் தீவிரப்படுத்தினர். வங்கிகள் பெயரில் வரும் போலி லிங்க்கை கிளிக் செய்ய வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தினர்.
இதனிடையே இந்த ஆன்லைன் மோசடியில் பிரபல நடிகை நக்மா சிக்கி ஒரு லட்சம் ரூபாய் பணத்தை இழந்திருக்கும் தகவல் வெளியானது. இதுகுறித்து நக்மா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நக்மாவின் செல்போனுக்கு வங்கியின் கே.ஒய்.சி விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டு ஒரு மெசேஜ் லிங்க் வந்துள்ளது. அந்த லிங்க்கை க்ளிக் செய்தபோது, அவருக்கு ஒரு போன் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், வங்கியிலிருந்து பேசுவதாகவும், கே.ஒய்.சி விவரங்களை எப்படி அப்டேட் செய்ய வேண்டும் என்று சொல்லிக்கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.
உடனே மோசடிப் பேர்வழி நக்மாவின் போனை அவரது கட்டுப்பாட்டில் எடுத்து, அவரது இன்டர்நெட் பேங்கிங் கணக்கைத் திறந்து அதிலிருந்து 99,998 ரூபாயை வேறு ஒரு வங்கிக் கணக்குக்கு மாற்றிவிட்டார். அந்த நபரிடம் நக்மா எந்த விவரத்தையும் பகிர்ந்துகொள்ளவில்லை என்றாலும், பணம் பறிபோனதாக நக்மா தெரிவித்துள்ளார்.
நக்மாவின் போனுக்கு 20-க்கும் மேற்பட்ட ஒன் டைம் பாஸ்வேர்டுகள் வந்ததாகவும், அந்த எண்களை தான் பகிரவில்லை என்றும் கூறியுள்ளார். இதனால் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் அவர்களால் பணத்தை எடுக்கமுடியவில்லை என்றும் நக்மா விளக்கமளித்துள்ளார் குறிப்பிட்ட தனியார் வங்கியைச் சேர்ந்த வாடிக்கையாளர்களைக் குறிவைத்து இந்த மோசடி நடந்து வருகிறது. பொதுமக்கள் இந்த விவகாரத்தில் மிகவும் எச்சரிக்கையுடம் இருக்க வேண்டும் என்றும், வங்கிகள் ஒருபோதும் ஒன் டைம் பாஸ்வேர்டு கேட்பதில்லை என்றும் போலீஸார் எச்சரித்திருக்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bank fraud, Crime News, Nagma, Tamil News