முகப்பு /செய்தி /இந்தியா / ”என் சகோதரனின் பயணம் இன்றுடன் முடிந்தது” - அண்ணனின் இறப்பு குறித்து குஷ்பு உருக்கம்!

”என் சகோதரனின் பயணம் இன்றுடன் முடிந்தது” - அண்ணனின் இறப்பு குறித்து குஷ்பு உருக்கம்!

குஷ்புடன் அவரது அண்ணனின் பழைய புகைப்படம்

குஷ்புடன் அவரது அண்ணனின் பழைய புகைப்படம்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகை குஷ்புவின் அண்ணன் இன்று உயிரிழந்துள்ளதாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்புவின் அண்ணன் இன்று காலமானார்.

தமிழ் 80 மற்றும் 90-களின் முக்கிய நடிகையாக வலம் வந்த நடிகை குஷ்பு இவர் ரஜினி, கமல், சரத்குமார் என பல முக்கிய கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் நடிகையாக மட்டுமல்லாமல் தற்போது அரசியலில் களமிறங்கி உள்ளார். குஷ்பு சமீபத்தில், எனது மூத்த சகோதரர் அபுபக்கர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். குறிப்பாக கடந்த 4 நாட்களாக வெண்டிலேட்டரிலிருந்து வருகிறார். நேற்றுதான் அவரது உடல் நிலையில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டது. அவருக்காக எல்லோரும் பிரார்த்தனை செய்யுங்கள் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

இதையும் படிங்க: சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் கைது… டிக்டாக் சூர்யா தேவி புகாரில் போலீசார் நடவடிக்கை

இந்நிலையில், இன்று குஷ்புவின் அண்ணன் அபுபக்கர் காலமானார். இந்த தகவலை தனது சமூக வலைதளப்பக்கத்தில் நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். உங்கள் அன்புக்குரியவர்கள்  எப்போதும் உங்களுடன் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பும் அளவுக்கு, விடைபெறும் நேரமும் வரும். என் சகோதரனின் பயணம் இன்றுடன் முடிந்தது.

அவருடைய அன்பும் வழிகாட்டுதலும் எப்போதும் எங்களோடு இருக்கும். அவருக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் சொல்வது போல், வாழ்க்கையின் பயணம் கடவுளால் தீர்மானிக்கப்படுகிறது என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

First published:

Tags: Kushboo, Twitter