மகாராஷ்டிர மாநில ஆளுநரைச் சந்திக்கிறார் நடிகை கங்கனா ரனாவத்..

கங்கனா ரனாவத்

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷியாரியை இன்று மாலை சந்தித்து பேசுகிறார்.

 • Share this:
  நடிகை கங்கனா ரனாவத் மும்பை காவல்துறை பற்றியும், மும்பை நகரை ஆக்கிரமிப்பு காஷ்மீருடனும் தொடர்புபடுத்தியும் பேசியது சர்ச்சையானது. இதைத்தொடர்ந்து பந்த்ராவில் உள்ள நடிகை கங்கனாவின் பங்களாவின் பல பகுதிகள் சட்டவிரோதமாக கட்டப்பட்டதாகக் கூறி மாநகராட்சி இடித்துத் தள்ளியது.

  இதனால் ஆளும் சிவசேனா கட்சிக்கும் கங்கனா ரனாவத்திற்கும் இடையேயான மோதல் போக்கு முற்றியது. மத்திய அரசு அவருக்கு ஒய் ப்ளஸ் பாதுகாப்பும் வழங்கியதும். இந்நிலையில், ஆளுநர் பகத் சிங் கோஷியாரியை கங்கனா ரனாவத் இன்று மாலை 4.30 மணிக்கு சந்தித்துப் பேசுகிறார்.  Also read: உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

  இந்நிலையில், நடிகை கங்கனா ரணாவத் பங்களா இடிப்பில் அரசுக்கு தொடர்பு இல்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.

  முன்னதாக கங்கனாவின் பங்களா இடிக்கப்பட்டதற்கு ஆளுநர் கோஷியாரி அதிருப்தி தெரிவித்ததுடன், முதலமைச்சர் உத்தவ் தாக்ரேவின் முதன்மை ஆலோசகரைத் தொடர்புகொண்டு இந்த விவகாரம் குறித்து ஆலோசித்தது குறிப்பிடத்தக்கது.
  Published by:Rizwan
  First published: