கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர், அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பலரை ஏமாற்றி பண மோசடி செய்துள்ளார். தொழிலதிபர் ஒருவரை மிரட்டி 200 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கடந்த 2019ஆம் ஆண்டு அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார் சுகேஷ். இவருடன் ஜாக்குலின் ஃபெர்னான்டஸ், நோரா பதேகி, நிக்கி தம்போலி உள்ளிட்ட பல நடிகைகளுக்கும் தொடர்பு இருப்பது அம்பலமாகி அவர்களும் விசாரணை வளையத்தில் சிக்கினர்.
தற்போது சுகேஷ் மீதான வழக்கில் நடிகை சாகத் கன்னாவும் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் தந்துள்ளார். இது தொடர்பாக நடிகை சாகத் கன்னா சமீபத்தில் அளித்த பேட்டியில் பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமானது. சாகத் கன்னா தனது பேட்டியில் கூறியதாவது, "2018ஆம் ஆண்டு நான் பள்ளி விழாவில் கலந்து கொள்ள மும்பையில் இருந்து டெல்லி சென்றேன். அப்போது எனக்கு பிங்கி இரானி என்பவரை ஏஞ்சல் தான் அறிமுகம் செய்து வைத்தார். பிங்கி இரானி சுகேஷின் உதவியாளர் என்பது பின்னர் தான் எனக்கு தெரியவந்தது.
எங்களுடன் டெல்லிக்கு பிங்கி இராணி வந்தார். டெல்லி விமான நிலையத்தில் இருந்து காரில் பள்ளிக்கு புறப்பட சென்றோம். அப்போது என்னை வேறு காரில் ஏறுமாறு ஏஞ்சல் கூறினார். பள்ளிக்கு அழைத்து செல்லவது போல ஏமாற்றி என்னை திகார் சிறைக்கு அழைத்து சென்றனர்.அங்கு சிறையில் சுகேஷ் சந்திரசேகர் இருந்த அறைக்கு என்னை கொண்டு சென்றனர்.
நான் ஏதோ வில்லங்கத்தில் மாட்டிக்கொண்டதை உணர்ந்தேன். சுகேஷின் அறையில் லேப்டாப், வாட்ச் உள்ளிட்ட பல ஆடம்பரப் பொருள்கள் இருந்தன. அங்கு சுகேஷ் என்னிடம் அறிமுகம் செய்துகொண்டார். நான் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன். தென் இந்தியாவின் பெரிய டிவி சேனலின் உரிமையாளர். முறைகேடு வழக்கில் சிறையில் உள்ளேன். பெரிய புள்ளி என்பதால் சிறையில் இத்தனை வசதிகள் எனக்கு செய்து தரப்பட்டுள்ளன” என்றார்.
மேலும், “நான் டிவி சீரியல்களை விரும்பிப் பார்ப்பேன். எனக்கு உன்னை ரொம்ப பிடித்துவிட்டது. நான் உன்னை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன் என சுகேஷ் மண்டியிட்டு ப்ரோபோஸ் செய்தார்” என்று கூறினார். தனக்கு திருமணமாகி இரு குழந்தைகள் இருப்பதாக கூறியதற்கு. உன் கணவன் சரியானவர் இல்லை. நான் உன் குழந்தைக்கு நல்ல அப்பாவாக இருப்பேன் என்று கட்டாயப்படுத்தினார்.
இதையும் படிங்க: “நான் உங்கள் விருந்தாளி.. போலீஸ்கிட்ட போகாதீங்க..” திருடனின் கடிதத்தால் மனம் மாறிய உரிமையாளர்..!
நான் உடனே ஆத்திரத்தில் சுகேஷிடம் சத்தம் போட்டு கத்தி திட்டினேன். ஆனால், சிறை என்பதால் எனக்கு பயமாகவும் இருந்தது. எப்படியாவது அங்கிருந்து சென்றால் போதும் என நினைத்துக்கொண்டேன். சுமார் அரை மணிநேர சந்திப்புக்கு பிறகு ஏஞ்சல் என்னை சிறையில் இருந்து வெளியே அழைத்து சென்றார். நான் மும்பைக்கு புறப்படும் முன்னர் ரூ.2 லட்சம் பணம், விலை உயர்ந்த வாட்ச் ஆகியவற்றை பரிசாக தந்தார். நான் மும்பைக்கு சென்றதும் சுகேஷ் தரப்பிடம் இருந்து மிரட்டல் அழைப்புகள் வந்தன. சிறையில் சந்தித்து பேசிய வீடியோ பதிவுகள் என்னிடம் உள்ளன. இதை வெளியே வெளியிட்டு விடுவேன். ரூ.10 லட்சம் பணத்தை தர வேண்டும் என மிரட்டி என்னிடம் ரூ.3 லட்சம் பறித்துக்கொண்டனர்.
இந்த பிரச்சனையால் எனது திருமண வாழ்க்கை பாதிப்பு கண்டது. நானும் எனது கணவரும் தற்போது பிரிந்து வாழ்கிறோம். நான் ஆரம்பத்திலேயே போலீசிடம் புகார் தந்திருக்க வேண்டும். ஆனால், அடுத்தடுத்து பிரச்சனைகள் வந்ததால் அதில் இருந்து தப்பினால் போதும் என்பது மட்டுமே எனது கவனத்தில் இருந்தது. எனக்கு நேர்ந்த நெருக்கடிகளுக்கு பின்னர் தான் சுகேஷ் யார் என்ற உண்மையான அவர் பின்புலம் என்பதை விசாரித்து அறிந்து கொண்டேன். நான் சந்தித்த பாதிப்புகளை உலகம் அறிந்து கொள்ள வேண்டும் என்ற இதை வெளியே கூறுகிறேன்" என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actress, Crime News, Tihar