• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பிரபல நடிகரின் பிறந்தநாள் கொண்டாட்டம்.. மாட்டை வெட்டி பலி கொடுத்த ரசிகர்களால் பரபரப்பு..

பிரபல நடிகரின் பிறந்தநாள் கொண்டாட்டம்.. மாட்டை வெட்டி பலி கொடுத்த ரசிகர்களால் பரபரப்பு..

பிரபல நடிகரின் பிறந்தநாள் கொண்டாட்டம்.. மாட்டை வெட்டி பலி கொடுத்த ரசிகர்களால் பரபரப்பு..

பிரபல நடிகரின் பிறந்தநாள் கொண்டாட்டம்.. மாட்டை வெட்டி பலி கொடுத்த ரசிகர்களால் பரபரப்பு..

கன்னட நடிகர் சுதீப் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எருமை மாட்டை வெட்டி பலி கொடுத்த ரசிகர்களால் பெரும் சர்ச்சை உருவானது. இதைத்தொடர்ந்து, போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Share this:
    கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான சுதீப் தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி படங்களிலும் நடித்து தேசிய அளவில் பிரசித்தி பெற்ற நடிகராக வலம் வருபவர். இவர் தனது அறக்கட்டளை மூலம் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும், ஏழை, எளியோருக்கும்  பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.

    அண்மையில் கூட தனது சொந்த ஊரான ஷிவமோகாவில், 133 வருட பழமையான அரசு பள்ளியைத் தத்தெடுத்தார். அந்த பள்ளியில் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்துக் கொடுத்து, கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்தார். நடிப்போடு நிறுத்தி விடாமல், இதுபோன்ற சமூக சேவைகளின் ஈடுபடுவது மூலம் ரசிகர்கள் மனதில் அளவுக்கு அதிகமான அன்பை பெற்றுள்ளார் நடிகர் சுதீப்.

    இந்நிலையில்,  நடிகர் சுதீப் நேற்று தனது 50 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி, அவரது ரசிகர்கள் மாநிலம் முழுவதும் உற்சாகமாக பிறந்தநாளை கொண்டாடினர்.

    Also read: பசுவை தேசிய விலங்காக மத்திய அரசு அறிவிக்கவேண்டும் - அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு

    அந்த வகையில், பெல்லாரி மாவட்டம் சந்தூர் என்ற கிராமத்தில் சுதீப் ரசிகர்கள் நூற்றுக்கணக்கானோர் ஒன்று கூடி கட்அவுட் வைத்து பிரம்மாண்டமாக பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது, சில ரசிகர்கள் அங்கு எருமை மாட்டை அழைத்து வந்து, அதை பலியிட்டு அந்த ரத்தத்தை கட்அவுட் மீது தெளித்து வழிபாடு நடத்தினர்.

    இந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பெல்லாரி நகர் காவல் நிலையத்தில் சுதீப் ரசிகர்கள் 25 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    செய்தியாளர் - ஆ.குமரேசன்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: