காங்கிரஸ் கட்சியில் இணைந்த நடிகை ஊர்மிளா!

காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் மற்றும் ராகுல் காந்தியின் கட்சி செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டே கட்சியில் இணைந்துள்ளேன். 

news18
Updated: March 27, 2019, 6:46 PM IST
காங்கிரஸ் கட்சியில் இணைந்த நடிகை ஊர்மிளா!
ஊர்மிளா மடோன்கர்
news18
Updated: March 27, 2019, 6:46 PM IST
நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்கள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் பிரபலங்களும்  கட்சிகளுக்குத்  தங்கள் ஆதரவை அளித்து வருகின்றனர். இந்நிலையில் பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்கர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தன்னுடைய ஆதரவையும் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியும் அவரை வரவேற்றுள்ளார். 

குழந்தை நட்சத்திரமாக பாலிவுட்டில் அறிமுகமான ஊர்மிளா மடோன்கர் என்பதுகளில் புகழ் பெற்ற நடிகையாக இருந்தார். தற்போது ஊர்மிளா காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை டெல்லியில் சந்தித்து அதிகாரப்பூர்வமாக கட்சியில் இணைந்தார்.

ராகுல் காந்தியும் , ரந்தீப் சுர்ஜீவாலாவும் ஊர்மிளாவை மகிழ்ச்சியாக வரவேற்றனர்.

கட்சியில் இணைந்தபின் செய்தியாளர்களை சந்தித்த ஊர்மிளா “ நான் தேர்தலுக்காக கட்சியில் இணையவில்லை. நிரந்தரமான கட்சி உறுப்பினராக இருக்கவே இணைந்துள்ளேன்.
Loading...


காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் மற்றும் ராகுல் காந்தியின் கட்சி செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டே கட்சியில் இணைந்துள்ளேன்.  கட்சியின் முன்னேற்றத்திற்காகவும், வெற்றிக்காகவும் துணை நிர்பேன் “ என்று கூறியுள்ளார்.

இந்தியா வேலையின்மைப் பிரச்னையில் திண்டாடுகிறது. இதைப் போக்குவதாக ரகுல் காந்தி கூறிய நிலையில் வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்கும் செயல்பாடுகளில் பங்கு கொண்டு வேலை செய்ய விரும்புவதாக ஊர்மிளா கூறியுள்ளார்.

சமீபத்தில் பாடகி மற்றும் நடனக் கலைஞரான சப்னா சவுத்ரி காங்கிரஸில் இணையப் போகிறார் என்கிற தகவல்கள் வெளியானது. பின் பத்திரிகையாளர்களை சந்தித்து காங்கிரஸில் இணையவில்லை என தனது நிலைபாட்டைத் தெரிவித்தார். மறுநாளே பிஜேபி தலைவர் மனோஜ் திவாரியுடன் நிற்பது போன்ற புகைப்படங்கள் பரவின என்பது குறிப்பிடத்தக்கது.

Also See...

First published: March 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...