மம்தா பானர்ஜி கட்சியிலிருந்து பெண் எம்.பி விலகுகிறாரா? ஃபேஸ்புக் பதிவு உண்மைதானா?

கட்சி நிகழ்ச்சிகளுக்கு எனக்கு அழைப்பு வருவதில்லை. எனக்கு இது மிகுந்த வலியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த புதிய ஆண்டில் மக்கள் பக்கம் இருக்கும் வகையில் ஒரு முடிவை எடுத்திருக்கிறேன்.

கட்சி நிகழ்ச்சிகளுக்கு எனக்கு அழைப்பு வருவதில்லை. எனக்கு இது மிகுந்த வலியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த புதிய ஆண்டில் மக்கள் பக்கம் இருக்கும் வகையில் ஒரு முடிவை எடுத்திருக்கிறேன்.

  • Share this:
இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் மாநிலங்களுள் ஒன்றான மேற்கு வங்கத்தில் பரபரப்பான அரசியல் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் சுவேந்து அதிகாரி தனது அமைச்சர் பதவியினை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் இணைந்தது நாடு முழுவதும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

மேற்கு வங்கத்தில் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸுக்கு அதிர்ச்சியளித்த பாஜக, மொத்தமுள்ள 42 தொகுதிகளில் 18ஐ கைப்பற்றியது. முந்தைய தேர்தலில் 34 தொகுதிகளில் வென்றிருந்த திரிணாமுல் காங்கிரஸ் கடந்த முறை 22 இடங்களில் மட்டுமே வென்றது.

அதே போல முந்தைய தேர்தலில் வெறும் இரண்டு தொகுதிகளை மட்டுமே வென்றிருந்த பாஜக 2019-ல் 18 தொகுதிகளை வென்றதையடுத்து சட்டமன்ற தேர்தலிலும் பெரும் மாற்றத்தை கொண்டு வரும் நோக்கில் வியூகங்களை வகுத்து வருகிறது.

வரும் தேர்தலில் மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை தோல்வியடைச் செய்யும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ள நிலையில் அம்மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் சில தினங்களுக்கு முன்னதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 50 எம்.எல்.ஏக்கள் பாஜகவிற்கு தாவ தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார். அவருக்கு பதிலடி அளிக்கும் வகையில் பேசிய அமைச்சர் ஜோதிபிரியா மாலிக் மே மாதத்திற்குள் 6 - 7 பாஜக எம்.பிக்கள் திரிணாமுல் காங்கிரஸுக்கு வரத் தயாராக இருப்பதாக கூறியிருந்தார்.இந்நிலையில் நடிகையாக இருந்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு எம்.பியான சதாப்தி ராயின் ஃபேஸ்புக் ரசிகர் பக்கத்தில் வெளியான பதிவு ஒன்று மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அதில், சிலர் கட்சி நிகழ்ச்சிகளில் என்னை பார்க்க முடியவில்லையே என கேட்கின்றனர். நான் மக்களிடம் செல்வதை சிலர் தடுக்கின்றனர். கட்சி நிகழ்ச்சிகளுக்கு எனக்கு அழைப்பு வருவதில்லை. எனக்கு இது மிகுந்த வலியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த புதிய ஆண்டில் மக்கள் பக்கம் இருக்கும் வகையில் ஒரு முடிவை எடுத்திருக்கிறேன்.

எந்த முடிவு எடுத்தாலும் அதனை சனிக்கிழமை 2 மணிக்கு அறிவிப்பேன்” என பதிவிடப்பட்டுள்ளது.

இதனிடையே இது குறித்து எந்த விளக்கமும் அளிக்காத ஷதாப்தி ராய், தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. அவரின் முடிவு என்ன என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என சக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பியான சவுகதா ராய் தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சுனில் மொந்தலும் பாஜகவில் இணைந்தார். பல தலைவர்களும் உள்கட்சி பூசல் காரணமாக கட்சியிலிருந்து விலகும் முடிவில் இருந்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Arun
First published: