‘தடுப்பூசி போடுவதை ஒத்திவைக்காமல் இன்றே போட்டுக்கொள்ளுங்கள்’: சஞ்சீவனி பிரச்சார தொடக்க விழாவில் சோனு சூட் பேச்சு!

சோனு சூட்

சஞ்சீவனி பிரச்சார இயக்கத்தை நெட்வொர்க் 18 மற்றும் அப்போலோ 24/7 மருத்துவமனை நிர்வாகம் இணைந்து நடத்துகிறது. இது பெடரல் வங்கியின் பெருநிறுவன சமுதாய பொறுப்பு (corporate social responsibility) நடவடிக்கையின் ஒரு அங்கமாகும்.

  • Share this:
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்கப்படுத்தும் ‘Sanjeevani – A Shot of Life’ பிரச்சார இயக்கத்தின் தொடக்க விழாவில் கலந்துகொண்ட நடிகர் சோனு சூட் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். அப்போலோ மருத்துவமனையின் சார்பில் அவருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

அடித்தட்டு, கிராமப்புற மக்களுக்கு கொரோனா தடுப்பூசி மீதான அச்சத்தை போக்கி அவர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டமானது உலக சுகாதார தினமான இன்று (ஏப்ரல் 7) தொடங்கப்பட்டுள்ளது.

சஞ்சீவனி பிரச்சார இயக்கத்தை நெட்வொர்க் 18 மற்றும் அப்போலோ 24/7 மருத்துவமனை நிர்வாகம் இணைந்து நடத்துகிறது. இது பெடரல் வங்கியின் பெருநிறுவன சமுதாய பொறுப்பு (corporate social responsibility) நடவடிக்கையின் ஒரு அங்கமாகும்.

சஞ்சீவனி பிரச்சார இயக்க தொடக்க விழாவில் கலந்து கொண்ட நடிகர் சோனு சூட் முன்மாதிரியாக கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “கடந்த ஆண்டு கொரோனா பரவல் காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் கால்நடையாக நடந்து சொந்த ஊர்களுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது, அவர்களிடம் அமைதி காக்கும்படியும், பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக்கொண்டோம். தற்போது கொரோனாவுக்கு எதிராக நம்மிடையே தடுப்பூசி இருக்கும் போது கடந்த ஆண்டு யாரெல்லாம் நாங்கள் கூறியதை கவனித்தார்களோ அவர்களெல்லாம் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என இப்போது கேட்டுக்கொள்கிறேன். என கூறினார்.

மேலும் நாட்டு மக்கள் அனைவரும் தங்களின் குடும்பங்களை, சுற்றத்தாரை பாதுகாத்திட கூடிய விரைவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் சோனு சூட் வலியுறுத்தினார்.

மக்களிடையே தாங்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாமா என்ற தயக்கம் இருப்பதாக உணர்கிறேன். ஒரு குடும்பத்தின் தலைவர் அந்தக் குடும்பத்தின் முன்மாதிரியாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும், நாளைக்கு போட்டுக்கொள்ளலாம் என ஒத்திவைக்காமல் இன்றே அதனை செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

சஞ்சீவனி பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, இந்தியாவில் 2 வது கொரோனா அலையில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள 5 மாவட்டங்களில் 5 கிராமங்களை தத்தெடுத்து, தங்கள் கிராமங்களில் இலவச தடுப்பூசிகளை வழங்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட 5 கிராமங்களில் Apollo 24/7 தடுப்பூசி முகாம்களை நடத்தும். இதில் அப்போலோவின் அனுபவமிக்க மருத்துவர்களும், செவிலியர்களும் ஈடுபடுத்தப்படுவர். இதன் மூலம் கொரோனா தடுப்பூசிகள் மீதான மக்களின் அச்சத்தை போக்குவதுடன் மக்களை தடுப்பூசி போட முன்வர வைக்க உந்துதலை ஏற்படுத்தும்.
Published by:Arun
First published: