பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நிலையில் பஞ்சாபைச் சேர்ந்தாரான பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் விரைவில் அரசியலில் நுழைய இருப்பதாக கூறியிருக்கிறார். எந்தக் கட்சியில் இணைவேன் என்று விரையில் அறிவிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சோனு சூட் பஞ்சாப் மாநிலம் மோகாவில் உள்ள தனது வீட்டில் இன்று செய்தியாளர்களிடையே பேசினார். அப்போது அவரின் சகோதரியான மாளவிகா சூட் உடன் இருந்தார். இந்நிலையில் சோனு சூட் தனது சகோதரி மாளவிகா அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாக தெரிவித்தார். ஆனால் அவர் எந்த கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிடுவார் என்பதை பிறகு தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
கொரோனா பேரிடர் காலத்தில் நாடு தழுவிய அளவில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது புலம்பெயர் தொழிலாளர்கள், ரயில், பேருந்து, விமான சேவைகள் தடைவிதிக்கப்பட்டிருந்ததால் கால்நடையாகவே பல நூறு கிலோமீட்டர்கள் நடந்து தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்ப தொடங்கினர்.
Also read: செக்ஸ் மட்டுமே தேவை, உன்னை காயப்படுத்த விரும்பவில்லை - பாலியல் கொடூரன்
அப்போது அவர்களுக்கு ஆபத்பாந்தவனாக திகழ்ந்த சோனு சூட், கால்நடையாக செல்லும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்ப தனது செலவில் அவர்களுக்கு போக்குவரத்து ஏற்பாடு செய்து தந்தார். மேலும் ஆக்சிஜன் கிடைக்காமல் உயிருக்கு போராடியவர்களுக்கு ஆக்சிஜன் கிடைக்கவும் உதவினார். இதனால் சோனு சூட் கொரோனா காலத்தில் நிஜ ஹீரோவாக புகழப்பட்டார். அவருக்கு பெருமளவில் ரசிக கூட்டம் உருவாகியது.
தனிநபராக அவர் மக்களுக்கு உதவி செய்து வந்த நிலையில் அரசியலுக்கு சோனு சூட் வரவேண்டும் என்ற கோரிக்கையும் அப்போதே எழுந்தது. தனது சகோதரி அரசியலுக்கு வரவிருப்பதாக கூறும் சோனு சூட் சட்டமன்ற தேர்தல் சமயத்தில் எந்த கட்சியில் இணைவது என்பதை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் சோனு சூட், பஞ்சாப் முதல்வர் சரன்ஜித் சிங் சன்னியை நேரில் சந்தித்தார். முன்னதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் சந்தித்து பேசியிருந்தார். இது தவிர டெல்லியின் பள்ளி மாணவர்களுக்கான ‘தேஷ் கா மெண்டர்ஸ்’ என்ற திட்டத்திற்கு பிராண்ட் அம்பாசிடராகவும் அவர் நியமிக்கப்பட்டிருந்தார். இது போன்ற காரணங்களால் அவர் காங்கிரஸ் அல்லது ஆம் ஆத்மி கட்சிகளில் இணைய வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Sonu sood