Home /News /national /

சாய்னாவிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் சித்தார்த்!

சாய்னாவிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் சித்தார்த்!

Actor Sidharth - Saina Nehwal

Actor Sidharth - Saina Nehwal

Siddharth apologises | நடிகர் சித்தார்த் தனது ட்வீட்டுக்காக சாய்னாவிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    சாய்னா நேவால் மீதான நடிகர் சித்தார்த்தின் டிவிட்டர் பதிவு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதற்காக அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.

    நடிகர் சித்தார்த், இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து பதிவிட்ட ட்வீட் மூலம் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். பாஜகவில் இணைந்தவரான சாய்னா நேவால், அண்மையில் பஞ்சாபில் பிரதமர் மோடிக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாட்டுக்காக கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். சாய்னாவின் பதிவுக்காக அவரை அறுவறுக்கத்தக்க வகையில் சித்தார்த் விமர்சித்து ட்வீட் பதிவிட்டிருந்தார். சித்தார்த்தின் ட்வீட் பெண் ஒருவரின் கண்ணியத்தை குழைக்கும் வகையில் இருந்தததாக கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் சித்தார்த்துக்கு எதிராக கொந்தளிப்பு ஏற்பட்டது.



    சினிமா, விளையாட்டு, அரசியல் துறையினர் என பல்வேறு தரப்பினரும் சித்தார்த்தை விமர்சித்து வருகின்றனர். இதனிடையே, தேசிய மகளிர் நல ஆணையம் சித்தார்த் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு தமிழகம் மற்றும் மகாராஷ்டிரா மாநில டிஜிபிக்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறது.

    என் மகள் இந்த நாட்டுக்காக பதக்கங்களை வென்றிருக்கிறார். சித்தார்த் என்ன செய்தார்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார் சாய்னா நேவாலின் தந்தை ஹர்வீர் சிங். முன்னணி ஆங்கில ஊடகத்தில் இது குறித்து பேசியுள்ள ஹர்வீர் சிங் நேவால் (சாய்னாவின் தந்தை) தனது மகள் குறித்து இழிவான முறையில் பதிவிட்ட சித்தார்த்தை சாடினார்.



    இந்த விவகாரம் கடந்த சில தினங்களாக பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் நடிகர் சித்தார்த் தனது ட்வீட்டுக்காக சாய்னாவிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

    நடிகர் சித்தார்த் வெளியிட்டுள்ள மன்னிப்பு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “எனது ட்வீட்டில் இடம்பெற்றிருந்த வார்த்தைகள் நகைச்சுவையானது மட்டுமே, உள்நோக்கம் கொண்டது அல்ல. ஒரு நகைச்சுவை யாருக்கும் புரியவில்லை என்றால் அது சிறந்த நகைச்சுவை அல்ல. சரியாக புரிந்து கொள்ளப்படாத எனது நகைச்சுவைக்கு மன்னிப்பு கோருகிறேன். என்னுடைய மன்னிப்பை ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன். எப்போது நீங்கள் தான் எனது சாம்பியன்” இவ்வாறு சித்தார்த் கூறியுள்ளார்.

     

     
    Published by:Arun
    First published:

    Tags: Actor Siddharth, Saina Nehwal

    அடுத்த செய்தி