ஹோம் /நியூஸ் /இந்தியா /

“தலைவரை சந்தித்தேன்”... ரஜினிகாந்துடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு... புகைப்படத்தை பதிவிட்டு நெகிழ்ச்சி...!

“தலைவரை சந்தித்தேன்”... ரஜினிகாந்துடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு... புகைப்படத்தை பதிவிட்டு நெகிழ்ச்சி...!

ரஜினிகாந்த் - சந்திரபாபு நாயுடு

ரஜினிகாந்த் - சந்திரபாபு நாயுடு

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை நடிகர் ரஜினிகாந்த் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Andhra Pradesh | Hyderabad

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் முத்துவேல் பாண்டியன் என்னும் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். 65 சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஜெயிலர் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில், அங்கு தங்கி படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருகிறார் ரஜினிகாந்த். இந்த நிலையில் ஐதராபாத் ஜூப்லி ஹில்ஸில் உள்ள ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு வீட்டிற்கு நேற்று சென்றார் ரஜினிகாந்த். அவரை பொன்னாடை அணிவித்து வரவேற்றார் சந்திரபாபு நாயுடு.

மரியாதை நிமித்தமான இந்த சந்திப்பில் ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து கேட்டறிந்த சந்திரபாபு நாயுடு, ஜெயிலர் திரைப்பட படப்பிடிப்பு எப்படி செல்கிறது என்றும் கேட்டுள்ளார். ஆந்திர, தமிழ்நாடு அரசியல் சூழல்கள் குறித்து விவாதித்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

ரஜினிகாந்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த சந்திரபாபு நாயுடு, “என் அன்பு நண்பர் 'தலைவர்' ரஜினிகாந்தை சந்தித்து உரையாடியதில் மகிழ்ச்சி” என்று பதிவிட்டுள்ளார்.

First published:

Tags: Chandrababu naidu, Rajinikanth