• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • நடிகர் புனித் ராஜ்குமாருக்கு சிகிச்சை அளித்த மருத்துவருக்கு போலீஸ் பாதுகாப்பு

நடிகர் புனித் ராஜ்குமாருக்கு சிகிச்சை அளித்த மருத்துவருக்கு போலீஸ் பாதுகாப்பு

புனித் ராஜ்குமார்

புனித் ராஜ்குமார்

புனித் ராஜ்குமாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி சமூக வலைத்தளத்தில் சிலர் பதிவிட்டனர்.

  • Share this:
மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் குடும்ப மருத்துவருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கன்னட திரையுலகின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்த புனித் ராஜ்குமார் (வயது 46) கடந்த வாரம் திடீரென மாரடைப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார். இவர் சந்தன கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்டு காட்டில் சிறை வைக்கப்பட்டிருந்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் இளைய மகனாவார்.

மருத்துவமனைக்கு கொண்டு வரப்படும் போதே புனித் ராஜ்குமாரின் உடல்நிலை மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருந்ததாகவும், அவரை காப்பாற்ற தேவையான எல்லா முயற்சிகளையும் எடுத்தும் அவர் காலமானதாக மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்தது.

Also read: மத்திய சிறைக்குள் வெடித்த கலவரம்.. அதிகாரிகளை சிறைக்குள் சிறை வைத்த கைதிகள்.

புனித் ராஜ்குமார் கன்னட திரையுலகின் சூப்பர் பவராக திகழ்ந்தார். மேலும் அவர் பல தொண்டு பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார். இதனால் அவருக்கு மிகவும் தீவிரமான ரசிகர்கள் இருந்து வந்தனர். புனித் ராஜ்குமாரின் மறைவு செய்தியை அறிந்து அதனை தாங்கிக் கொள்ள முடியாமல் மாரடைப்பு ஏற்பட்டும், தற்கொலை செய்து கொண்டும் 10 ரசிகர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே புனித் ராஜ்குமாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி சமூக வலைத்தளத்தில் சிலர் பதிவிட்டனர். மருத்துவ கவனக்குறைவு காரணமாகவே புனித் ராஜ்குமார் மறைந்ததாகவும் சிலர் பதிவிட்டனர். இந்த பதிவுகள் அவரின் ரசிகர்களை மூர்க்கத்தனமாக்கியிருக்கிறது.

Also read: அபுதாபியில் இந்திய பிட்ச் பராமரிப்பாளர் திடீர் மரணம்.. உலகக் கோப்பை போட்டி தொடங்கும் முன் சோகம்..

இந்நிலையில், இது போன்ற பொய் செய்திகள் பரவி வருவதால் பெங்களூருவில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனைகளின் கூட்டமைப்பு, புனித் ராஜ்குமாருக்கு சிகிச்சை அளித்து வந்த அவரது குடும்ப மருத்துவர் டாக்டர். ரமணா ராவ், மற்றும் பிற மருத்துவ குழுவினருக்கு அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்க உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கடிதம் அனுப்பினர். மேலும் நடிகர் புனித் ராஜ்குமாரின் உயிரை காப்பாற்ற தேவையான அனைத்து முயற்சிகளையும் மருத்துவரும், மருத்துவ குழுவினரும் செய்தனர். இருப்பினும் அவர் உயிரிழந்துவிட்டார். இது போல உயிரிழப்புகளின் போது மருத்துவ குழு மீது பொதுமக்கள், உறவினர்கள் சினம் கொண்டு மருத்துவ துறைக்கு எதிராக திரும்புவது கவலையளிப்பதாகவும் அதில் தெரிவிகப்பட்டிருந்தது.

இந்நிலையில் பெங்களூருவின் சதாசிவ நகரில் உள்ள புனித் ராஜ்குமாரின் மருத்துவர் ரமணா ராவின் மருத்துவமனைக்கு போலீஸ் பேட்ரல் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. ரமணா ராவுக்கு அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டுவிடாமல் தடுக்கவே இந்த போலீஸ் பாதுகாப்பு எனவும், நிலைமையை உற்று நோக்கி வருவதாகவும் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: