துப்பாக்கியால் சுடச் சொன்னவர்களை மக்கள் துடைப்பத்தால் அடித்திருக்கிறார்கள் - பிரகாஷ்ராஜ்

துப்பாக்கியால் சுடச் சொன்னவர்களை மக்கள் துடைப்பத்தால் அடித்திருக்கிறார்கள் - பிரகாஷ்ராஜ்
பிரகாஷ்ராஜ் - நடிகர்
  • News18 Tamil
  • Last Updated: February 11, 2020, 12:54 PM IST
  • Share this:
துப்பாக்கியால் சுடச் சொன்னவர்களை டெல்லி மக்கள் துடைப்பத்தால் அடித்துள்ளார்கள் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்..

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. அதில் 62.59 சதவிகித வாக்குகள் பதிவாகின. பாரதிய ஜனதா, ஆம் ஆத்மி, காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவி வந்த நிலையில் ஆரம்பத்தில் வெளியான கருத்துக் கணிப்பு ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களைப் பிடித்து வெற்றியைத் தக்க வைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் வெளியான கருத்துக் கணிப்புகள் உண்மையாகியுள்ளன. ஆட்சி அமைக்க 36 தொகுதிகள் தேவை என்ற நிலையில் தற்போதைய நிலவரப்படி 57 இடங்களில் முன்னிலை வகித்து வரும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை மீண்டும் தக்கவைத்துள்ளது.


இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் பிரகாஷ்ராஜ், “துப்பாக்கியால் சுடச் சொன்னவர்களை டெல்லி மக்கள் துடைப்பத்தால் அடித்துள்ளார்கள்” என்று கூறியுள்ளார்.மேலும் படிக்க: Delhi Election Results 2020 LIVE Updates | டெல்லி தேர்தல் முடிவுகள் - ஆட்சியைத் தக்க வைக்கிறது ஆம் ஆத்மி
First published: February 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்