• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • புதிய அரசியல் கட்சி துவங்குகிறாரா நடிகர் பிரகாஷ் ராஜ்?

புதிய அரசியல் கட்சி துவங்குகிறாரா நடிகர் பிரகாஷ் ராஜ்?

பிரகாஷ் ராஜ்: கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி அரசியலில் களமிறங்கியதாக இவர் அறிவித்தார். உடனே 2019 மக்களவைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக மத்திய பெங்களூரு தொகுதியில் போட்டியிட உள்ளார். அவரின் நெருங்கிய நண்பரும், பிரபல கன்னட பத்திரிகையாளருமான கவுரி லங்கேஷ், வலது சாரி அமைப்பைச் சேர்ந்தவரால் கொலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து, மோடி தலைமையிலான மத்திய அரசை பிரகாஷ் கடுமையாக விமர்சித்து வருகிறார். (Image: Facebook)

  • Last Updated :
  • Share this:
    நடிகர் பிரகாஷ் ராஜ் புதிதாக ஓர் அரசியல் கட்சி துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    நடிகர் பிரகாஷ் ராஜ் நாடாளுமன்றத் தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அந்தத் தொகுதியில் பாஜக வேட்பாளர் பி.சி.மோகன் வெற்றிபெற்றார். நடிகர் பிரகாஷ்ராஜ் 28 ஆயிரத்து 906 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

    நடிகர் பிரகாஷ்ராஜ் பெங்களூரு பத்திரிக்கையாளர்களிடம் பேசும் போது, ‘‘கடந்த 6 மாதமாக பெங்களூர் முழுவதும் பயணம் செய்து மக்களைச் சந்தித்து அவர்களின் வாழ்வாதார பிரச்னைகளுக்காக குரல் கொடுத்தேன். போலி தேசபக்தியையும், வெறுப்பையும் ஊட்டிய அரசியல் தலைவர்களை எதிர்த்தேன். ஆனால் மக்கள் பாஜக வாக்களித்து அமோக வெற்றி பெறச்செய்துள்ளனர். மக்களின் முடிவை நான் ஏற்கிறேன்.

    நான் ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக தொடர்ந்து போராடுவேன். பெங்களூர் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன். சுயேச்சை வேட்பாளராக இருப்பதால் மக்களுக்கும் எனக்கும் இடைவெளி நிலவுவதாக சொல்கிறார்கள். சினிமா எனது தொழில் என்பதால் தொடர்ந்து நடிக்கவும் இருக்கிறேன். எனது குடும்பத்திற்காகவும், எனது இயக்கத்தை நடத்தவும் பணம் தேவைப்படுவதால் படங்களில் நடிப்பேன்’’ என்று பேசினார்.

    பிரகாஷ் ராஜ் விரைவில் அரசியல் கட்சி ஒன்றை துவங்கப் போவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

    மேலும் பார்க்க...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ilavarasan M
    First published: