முகப்பு /செய்தி /இந்தியா / தெலங்கானாவில் ஆயிரம் ஏக்கர் வனப்பகுதியை தத்தெடுத்த நடிகர் நாகார்ஜுனா

தெலங்கானாவில் ஆயிரம் ஏக்கர் வனப்பகுதியை தத்தெடுத்த நடிகர் நாகார்ஜுனா

அதிக எண்ணிக்கையில் மரங்களை நடுவது, ஏற்கனவே இருக்கும் மரங்களை பராமரிப்பது உள்ளிட்ட பணிகளுக்காக ரூ. 2 கோடியை நாகார்ஜுனா தனது குடும்பத்தின் சார்பாக வழங்கியுள்ளார்.

அதிக எண்ணிக்கையில் மரங்களை நடுவது, ஏற்கனவே இருக்கும் மரங்களை பராமரிப்பது உள்ளிட்ட பணிகளுக்காக ரூ. 2 கோடியை நாகார்ஜுனா தனது குடும்பத்தின் சார்பாக வழங்கியுள்ளார்.

அதிக எண்ணிக்கையில் மரங்களை நடுவது, ஏற்கனவே இருக்கும் மரங்களை பராமரிப்பது உள்ளிட்ட பணிகளுக்காக ரூ. 2 கோடியை நாகார்ஜுனா தனது குடும்பத்தின் சார்பாக வழங்கியுள்ளார்.

  • Last Updated :

தெலங்கானாவில் ஆயிரம் ஏக்கர் வனப்பகுதியை முன்னணி நடிகர் நாகார்ஜுனா குடும்பத்துடன் தத்தெடுத்துக் கொண்டுள்ளார். அவரது இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழில் ரட்சகன், தோழா உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் நாகார்ஜுனா தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ளார். நடிகை அமலாவை மணந்த அவருக்கு அகில் அக்கினேனி, நாக சைத்தன்யா என்ற மகன்கள் உள்ளனர். இருவரும் தெலுங்கில் முக்கிய நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், தெலங்கானாவில் ஆயிரம் ஏக்கர் வனப்பகுதியை நாகார்ஜுனா குடும்பத்தினருடன் தத்தெடுத்துக் கொண்டுள்ளார். முதற்கட்டமாக இந்த பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் மரங்களை நடுவது, ஏற்கனவே இருக்கும் மரங்களை பராமரிப்பது உள்ளிட்ட பணிகளுக்காக ரூ. 2 கோடியை நாகார்ஜுனா தனது குடும்பத்தின் சார்பாக வழங்கியுள்ளார்.

இதையும் படிங்க - பிரபல நடிகர் சாலை விபத்தில் மரணம்... விவசாயிகள் போராட்டம் - வன்முறை வழக்கில் கைதானவர்

இதுதொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் நாகார்ஜுனா மகன்கள் உள்பட குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்.

ஐதராபாத் - வாரங்கல் நெடுஞ்சாலையில் செங்கிசெர்லா வனப்பகுதி உள்ளது. சுற்றிலும் நகர்மயமாக்கப்பட்ட இடங்களில் இந்த வனப்பகுதி காணப்படுகிறது. மொத்தம் 1,682 ஏக்கர் அளவு கொண்ட இதில், 1000 ஏக்கர் பரப்பை நாகார்ஜுனா தத்தெடுத்துக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க - செல்பி எடுக்க பியூட்டி கேமரா பயன்படுத்தும் பெண்கள் கவனத்திற்கு... மிச்சமீதியுள்ள சீன ஆப்களுக்கும் மத்திய அரசு தடை

இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் நாகார்ஜுனா பதிவிட்ட புகைப்படங்கள் வரவேற்பை பெற்றுள்ளன. வனப்பகுதியை தத்தெடுத்தது குறித்து ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், 'பசுமை இந்தியா சவால் நிகழ்ச்சியை எம்.பி. சந்தோஷ் குமார் தொடங்கி வைத்தார். தெலங்கானாவின் இயற்கையை வளப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் நானும் கலந்து கொண்டேன். அப்போது, சந்தோஷ் குமாருடன் ஆலோசித்தபோதுதான், வனப்பகுதியை தத்தெடுக்கலாம் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது' என்றார்.

First published:

Tags: Deforestation