பாஜகவில் இணைந்தார் ‘டிஸ்கோ டான்சர்’ மிதுன் சக்கரபோர்த்தி!

மிதுன் சக்கரபோர்த்தி

1982 ம் ஆண்டு வெளிவந்த டிஸ்கோ டான்சர் படத்தின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர். இந்த படத்தின் இடம்பெற்ற im a disco dance என்ற பாடல் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது.

  • Share this:
    1980களில் பாலிவுட்டை ஆட்சி செய்த ‘டிஸ்கோ டான்சர்’ புகழ் நடிகர் மிதுன் சக்கரபோர்த்தி மேற்குவங்க தேர்தலை முன்னிட்டு பாஜகவில் இன்று இணைந்தார்.

    மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, 1980களில் பாலிவுட்டை கலக்கிய இவர் 3 முறை தேசிய விருது பெற்றுள்ளார். மிது சக்கரபோர்த்தி கதாநாயகனாக நடித்து 1989-ம் 19 படங்கள் வெளிவந்தன. இதன் மூலம் அவர் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். இன்றளவும் இந்த சாதனை முறியடிக்கப்படவில்லை. ஹிந்தி, பெங்காலி, தமிழ், தெலுங்கு, ஒரியா, பஞ்சாபி, போஜ்பூரி, கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளில் 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1982 ம் ஆண்டு வெளிவந்த டிஸ்கோ டான்சர் படத்தின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர். இந்த படத்தின் இடம்பெற்ற im a disco dance என்ற பாடல் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது.

    திரிணாமுல் காங்கிரஸின் சார்பில் ராஜ்யசபா எம்.பியாக இருந்த மிதுன் சக்கரவர்த்தி கொல்கத்தாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பிரிகேட் மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்ட அரங்கிற்கு இன்று மதியம் வருகை தந்தார். அங்கு பாஜக தலைவர்கள் முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். அப்போது முன்னாள் அமைச்சர் சுவேந்து அதிகாரி, பாஜக பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா, துணைத் தலைவர் முகுல் ராய் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இருந்தனர்.

    பாஜகவில் இணைந்த பின்னர் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மிதுன் சக்கரவர்த்தி, ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற என் கனவு இன்று நிறைவேறியுள்ளதாக தெரிவித்தார்.

    அப்போது பேசிய அவர், “நான் ஒரு பெங்காலி, இந்த மண்ணில் வளர்ந்தவர்கள் அனைவருக்கும் இதன் மீது உரிமை உள்ளது. நான் மேற்குவங்கத்தில் உள்ள ஒவ்வொருவரின் உரிமைக்காகவும் அவர்களுடன் துணை நிற்பேன்.

    வடக்கு கொல்கத்தாவின் மிகச்சிறிய பகுதியான ஜோராபகனில் இருந்து வந்தவன், நான் பெரியதாக மாற வேண்டும் என்று கனவு கண்டேன், ஆனால் பிரதமர் நரேந்திர மோடி உட்பட நாட்டின் மிகப்பெரிய அரசியல் தலைவர்களுடன் ஒரு மேடையை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என்று நான் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை என தெரிவித்தார்.

    2014 முதல் 2016 வரை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்.பியாக இருந்தார், பின்னர் அரசியலில் இருந்து விலகும் முடிவில் தன் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்க்கது.
    Published by:Arun
    First published: