செங்கோட்டையில் நடந்த வன்முறை: நடிகர் தீப் சித்து கைது

நடிகர் தீப் சித்து

நடிகர் தீப் சித்து இன்று கைது செய்யப்பட்டதாக டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 • Share this:
  ஜனவரி 26-ஆம் தேதி டெல்லி செங்கோட்டையில் நடந்த வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதாக நடிகர் தீப் சித்து கைது செய்யப்பட்டுள்ளார்.

  மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சீர்திருத்த சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் 2 மாதங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

  இந்நிலையில், ஜனவரி 26-ஆம் தேதி, குடியரசுத் தினத்தன்று, டெல்லியை நோக்கி டிராக்டர் பேரணி நடத்தப்பட்டது. அப்போது சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. சிலர் டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டும், கொடிகளை ஏற்றியும் போராட்டம் நடத்தினர். அப்போது காவலர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

  டெல்லியில் அன்று நடந்த கலவரத்திற்கு, நடிகர் தீப் சித்து காரணம் என விவசாயிகள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. கவல்துறையினர் தீப் சித்து மீது வழக்குப் பதிவு செய்தனர்.

  மேலும் படிக்க... சசிகலா தேர்தலில் போட்டியா? சிலீப்பர் செல் யார்? : டிடிவி தினகரன் பேட்டி

  இந்நிலையில், தீப் சித்து தலைமறைவானார். மாயமான தீப் சித்துவை காவல்துறையினர் தேடி வந்தனர். இதனைத் தொடர்ந்து, தீப் சித்து குறித்து தகவல் கொடுத்தார் 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என டெல்லி காவல்துறையினர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருந்த நிலையில், தீப் சித்து இன்று கைது செய்யப்பட்டதாக டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
  Published by:Suresh V
  First published: