இணையதளத்தில் சிம் கார்டு வழங்க அனுமதி வேண்டும்... மத்திய அரசுக்கு தகவல்தொடர்பு நிறுவனங்கள் கோரிக்கை..!

தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்படுவது உறுதிசெய்யப்படும் என்றும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

இணையதளத்தில் சிம் கார்டு வழங்க அனுமதி வேண்டும்... மத்திய அரசுக்கு தகவல்தொடர்பு நிறுவனங்கள் கோரிக்கை..!
கோப்புப் படம்
  • Share this:
வாடிக்கையாளர்களுக்கு இணையதளம் வாயிலாக புதிய சிம் கார்டுகளை விநியோகிக்க அனுமதிக்க வேண்டும் என்று மத்திய தொலைதொடர்பு நிறுவனத்திற்கு தகவல் தொடர்பு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

இதுதொடர்பாக செல்போன் சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் செல்ஃபோன்களுக்கு புதிதாக சிம் கார்டு இணைப்பு பெற முடியாத நிலை இருப்பதாகக் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால், ஆன்லைன் முறையில் வாடிக்கையாளர்களின் தகவல்களை அறிந்து சிம் கார்டு இணைப்பு வழங்குவதற்கு அனுமதியளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


தகவல் தொடர்பு நிறுவனத்தின் இணையதளத்தில் வாடிக்கையாளர்கள் தங்களது தகவல்களை பதிவு செய்துவிட்டால் அவர்களது வீடு தேடி சிம் கார்டுகள் விநியோகிக்கப்படும் என்றும் தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்படுவது உறுதிசெய்யப்படும் என்றும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also see...
First published: April 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading