ராமர் எங்களை ஆசிர்வாதமாக வைத்திருப்பார் - பாபர் மசூதி தீர்ப்பு குறித்து எல்.கே.அத்வானி மகிழ்ச்சி
ராமர் எங்களை ஆசிர்வாதமாக வைத்திருப்பார் என்று பா.ஜ.க மூத்த தலைவரும், பாபர் மசூதி இடிப்பு வழக்கிலிருந்து விடுதலைச் செய்யப்பட்டவருமான எல்.கே.அத்வானி தெரிவித்துள்ளார்.

எல்.கே.அத்வானி
- News18 Tamil
- Last Updated: September 30, 2020, 5:21 PM IST
உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி இடிக்கப்பட்டது. ராமஜென்மபூமி இயக்கத்தை முன்னெடுத்த பாஜக மூத்த தலைவர் அத்வானி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர்கள் முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங், வினய் கட்டியார், சாத்வி ரிதம்பரா உள்பட 32 பேருக்கு மசூதி இடிப்பில் தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது. அந்த தீர்ப்பில், ‘மசூதி இடிக்கப்பட்டது முன்னரே திட்டமிடப்பட்டது இல்லை. எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டவர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்றனர்’ என்று குறிப்பிட்டு குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த தீர்ப்பு குறித்து செய்தியளார்களைச் சந்தித்த எல்.கே.அத்வானி, ‘ராம்ஜென் பூமி இயக்கத்தின் மூலமான என்னுடைய சொந்த நம்பிக்கை மற்றும் கட்சியின் நம்பிக்கையை தீர்ப்பு நிரூபித்துள்ளது. ராமர் எங்களை ஆசிர்வாதமாக வைத்திருப்பார். ஜெய்ஸ்ரீராம்’ என்று தெரிவித்தார்.