Home /News /national /

ரூ.1.3 லட்சம் கோடி.. இந்திய விமானப்படையின் அசரவைக்கும் கொள்முதல்..

ரூ.1.3 லட்சம் கோடி.. இந்திய விமானப்படையின் அசரவைக்கும் கொள்முதல்..

இந்திய விமானப்படை

இந்திய விமானப்படை

இந்திய வான்படை உலகில் நான்காவது பெரிய விமானப் படையாகத் திகழ்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
இந்திய ராணுவத்தின் முப்படைகளில் ஒன்றான இந்திய விமானப் படை, உலக அளவில் சக்தி வாய்ந்த படைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது இந்தியாவை எதிரிகளின் வான்வழித் தாக்குதலில் இருந்து பாதுகாத்தலையும், வான்வழித் தாக்குதலை முன்னின்று நடத்துதலையும் குறிக்கோளாகக் கொண்டது. இந்த IAF 1932 ஆம் ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி தோற்றுவிக்கப்பட்டது. இந்திய வான்படை சுமார் 170,000 வீரர்களைக் கொண்டுள்ளது. சுமார் 1,130 போர்விமானங்களும் 1,700 மற்ற பயன்பாட்டு விமானங்களும் படையில் உள்ளன. 

அண்மை காலத்தில் இந்திய வான்படையில் பெரிய அளவிலான நவீனமயமாக்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்தவகையில் வரவிருக்கும் ஏரோ இந்தியாவின் போது கையெழுத்திடப்படவுள்ள 83 LCA தேஜாஸ் மார்க் 1A  விமானத்திற்கான ஒப்பந்தத்துடன், இந்திய விமானப்படை இப்போது மல்டிரோல் போர் விமானத் திட்டத்தில் கவனம் செலுத்தவுள்ளது. இதன் கீழ் ரூ 1.3 லட்சம் கோடிக்கும் அதிகமான செலவில் எதிர்பார்க்கப்படும் 114 போர் விமானங்களை வாங்கவும் IAF திட்டமிட்டுள்ளது. விமானப்படை ஒரு நேரத்தில் ஒரு போர் விமானத் திட்டத்தை மேற்கொண்டிருந்த காலம் தற்போது மாறியுள்ளது. 

இதனால் தற்போது IAF 83 LCA மார்க் 1A விமானங்களை கொள்முதல் செய்ய பாரத பிரதமர் நரேந்திர மோடி  தலைமையிலான பாதுகாப்பு அமைச்சரவைக் குழு அனுமதித்துள்ளது. ரூ 50,000 கோடி மதிப்பிலான இதற்கான ஒப்பந்தம் பெங்களூரில் ஏரோ இந்தியா நிகழ்ச்சியின் போது கையெழுத்திட திட்டமிடப்பட்டுள்ளது. 

“83 எல்.சி.ஏ தேஜாஸ் MiG-21 போர் விமானங்களின் நான்கு படைப்பிரிவுகளுக்கு பதிலாக எதிர்காலத்தில் ஒவ்வொரு கட்டமாக விமானப்படையில் இணைக்கப்படும். மேலும் இப்போது 114 போர் விமானங்கள் திட்டத்தில் கவனம் செலுத்தப்படும்” என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்திய விமானப் படை ஏற்கனவே டெண்டருக்கான தகவல் கோரிக்கையை வெளியிட்டுள்ளது. மேலும் பல பில்லியன் டாலர் திட்டத்திற்கான பாதுகாப்பு அமைச்சகத்தின் முன் முக்கியதேவையை ஏற்றுக்கொள்வதற்கான  திட்டத்தையும் IAF விரைவில் தொடங்கவுள்ளது. 

இது 4.5 பிளஸ் தலைமுறை விமானங்களை வாங்க உதவும் ஆம்னி ரோல்  ரஃபேல் பைட்டர்களின் திறன்களுடன் பொருந்தக்கூடிய மிகப்பெரிய எண்கள் ஆகும். கடந்த ஆண்டிலிருந்து இவை சேர்க்கப்படத் தொடங்கியுள்ளன. அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த போர் ஜெட் உற்பத்தியாளர்கள் உட்பட பல உலகளாவிய நிறுவனங்கள் இந்த தகவல் கோரிக்கைக்கு பதிலளித்துள்ளனர். அமெரிக்கா எஃப் -15 ஸ்ட்ரைக் ஈகிள், எஃப் -18 சூப்பர் ஹார்னெட் மற்றும் எஃப் - 21 என்ற பெயரில் எஃப் -16 வேரியண்ட்டை வழங்கும்போது, ரஷ்யாவோ MiG-35 மற்றும் சுகோய் ஃபைட்டர வழங்க வாய்ப்புள்ளது. 

மேலும் ரஷ்யர்கள் மிக் -35 மற்றும் சுகோய் ஃபைட்டரை வழங்கும் என கூறப்பட்டுள்ளது. ஸ்வீடனின் சாப் அதன் கிரிபன் போர் விமானத்துடன் 2007 ஆம் ஆண்டில் இந்திய விமானப்படைக்கு வழங்கப்பட்ட விமானத்தை விட இப்போது அப்டேட்டடாக உள்ளதாக கூறியுள்ளது. 

ரஃபேல் போர் விமானங்களுடன் இந்த டெண்டரில் பிரான்ஸ் (France) பங்கேற்கவுள்ளது. அண்மையில், 114 பைட்டர் கையகப்படுத்தும் திட்டத்திற்கான வலுவான போட்டியாளர்களில் ஒருவராக ரஃபேல் உள்ளதாக விமானப்படைத் தலைவர் ஏர் தலைமை மார்ஷல் RKS படவுரியா குறிப்பிட்டார். 

மேலும் படிக்க... Budget 2021 | சென்னை மெட்ரோ விரிவாக்க பணிகளுக்கு ரூ.63,246 கோடி ஒதுக்கீடு - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

இந்நிலையில் ஆத்மநிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் ஒரு வலுவான உள்நாட்டு பாதுகாப்புத் துறையை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் முன்முயற்சியின் ஒரு பகுதியாக 114 விமானங்களும் மேட் இன் இந்தியாவாக இருக்கும். மேலும் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய பங்குதாரருக்கு தொழில்நுட்பத்தை மாற்ற வேண்டும் என்பது ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகவும் உள்ளது.

மேலும் படிக்க... Budget 2021: தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை

இது போன்ற அரசின் நடவடிக்கைகள் நாட்டை வளர்ச்சியின் பாதையில் கொண்டுசேர்க்கும். இந்திய எல்லையில் சீனா மற்றும் பாகிஸ்தான் என இருமுனை அச்சுறுத்தல் இருக்கும் நிலையில், இந்திய விமானப்படையின் இந்த கொள்முதல், நாட்டின் பாதுகாப்புக்கு அதிக வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Air force, Budget 2021, Union Budget 2021

அடுத்த செய்தி