• HOME
 • »
 • NEWS
 • »
 • national
 • »
 • ஐடி ப்ரூஃப், கையில் கிடைக்கும் பணம், வாடகைக்கு கார் - ரூம் மேட்களை அலறவிட்ட ஆந்திரா திருடன்

ஐடி ப்ரூஃப், கையில் கிடைக்கும் பணம், வாடகைக்கு கார் - ரூம் மேட்களை அலறவிட்ட ஆந்திரா திருடன்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

கடந்தாண்டு ஜூலை மாதம் தான் திருடிய டிரைவிங் லைசென்ஸ் , அடையாள அட்டையை வைத்து ராயல் என்பீல்டு பைக்கை வாடகைக்கு எடுத்துவிட்டு கம்பி நீட்டியுள்ளார்.

 • Share this:
  பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பது போல் ஆந்திரா போலீஸாருக்கு நீண்ட நாள்களாக தண்ணீக்காட்டிக் கொண்டிருந்த மகேஷ் குமார் என்ற திருடனை போலீஸார் கைது செய்துள்ளனர். டிப் டாப் ஆசாமியாக சென்று வாகனத்தை வாடகைக்கு எடுத்து சென்றுவிடுவார். பின்னர் காரின் நம்பர் ப்ளேட் ஆகியவற்றை மாற்றி குறைந்த விலைக்கு விற்று எஸ்கேப் ஆகிவிடுவார். காரை வாடகைக்கு எடுக்கும்போது மகேஷ் அளித்த அடையாள அட்டையை எடுத்துக்கொண்டு அந்த முகவரிக்கு சென்றால் அங்கு அவரால் பாதிக்கப்பட்ட எதாவது ஒரு அப்பாவி இருப்பார். அவரும் தன் பங்குக்கு போலீஸில் ஒரு புகார் கொடுத்து விட்டு வருவார்.

  இந்த மகேஷுக்கு எதிராக 2016-ம் ஆண்டில் இருந்து ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் 21 வழக்குகள் பதிவாகியுள்ளதாக ஆந்திர காவல்துறையினர் கூறுகின்றனர். இந்தாண்டு மட்டும் வழக்குகள் இவர் மீது பதிவாகியுள்ளது. இதனையடுத்து இவரை பிடிக்கும் பணியை போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளார். மகேஷ் ஒரு பொறியியல் பட்டதாரியாம். ஆரம்பத்தில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். செல்போன் திருடியதில் இருந்து மகேஷின் கேஸ் ஹிஸ்ட்ரி தொடங்குகிறது. மொபைல் போன் திருடியதாக முதல் வழக்குப்பதிவாகியுள்ளது. அதன்பின்னர் கேமராக்களை திருடியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு. கொஞ்ச காலம் சிறை வாசம் அனுபவித்துள்ளார். அதன்பின்னர்தான் நூதன திருட்டை கையில் எடுத்துள்ளார்.

  மகேஷ் பொறியியல் பட்டதாரியாக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு ஷேரிங் ரூம்களில் தங்குவார். இவரது கேஸ் ஹிஸ்டரி அரியாத ரூம்மேட்ஸ்கள் இவரை சேர்த்துக்கொள்வார். இப்படித்தான் 2020-ல் நாகேந்திர பிரசாத் என்பவருடன் ரூம் ஷேரிங் செய்துள்ளார். பின்னர் அவருடைய பணம் ரூ.1,60,000 ஆதார் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், லக்கேஜ் எல்லாம் எடுத்துக்கொண்டு ஜூன் மாதம் எஸ்கேப் ஆகிவிட்டார்.

  ஜூலை மாதம் நாகேந்திர பிரசாத்தின் டிரைவிங் லைசென்ஸ் , அடையாள அட்டையை வைத்து ராயல் என்பீல்டு பைக்கை வாடகைக்கு எடுத்துவிட்டு கம்பி நீட்டியுள்ளார். வண்டியோட விசாகப்பட்டினம் சென்றுவிட்டார். அங்கு இருவரிடன் ரூம் ஷேரிங் அங்கு கையில் கிடைத்த பணம். இருவரின் ஆவணங்களோடு எஸ்கேப். புனே சதிஷ் என்பவருடன் ரூம் ஷேரிங் அங்கு கையில் கிடைத்த சில லட்சங்களுடன் எஸ்கேப். ஆவணங்களில் தன்னுடைய புகைப்படத்தை மாற்றி அதனைப்பயன்படுத்தி வந்துள்ளார்.

  கடந்தாண்டு அக்டோபர் மாதம் ஜூம் காரை வாடகைக்கு எடுத்துள்ளார். காரும் திரும்பவில்லை ஜிபிஎஸ் டிராகிங் அகற்றப்பட்டது. மகேஷும் வரவில்லை காரும் வரவில்லை. ஜூம் கார் மேலாளர் மகேஷ் கொடுத்த ஐடி ப்ரூஃப்களை கொண்டு போலீஸில் புகார் தெரிவித்துள்ளார். ஆவணங்களில் தன்னுடைய புகைப்படத்தை மாற்றி அதனைப்பயன்படுத்தி வந்தது தெரியவந்துள்ளது. கேரளாவில் இருந்து திரும்பும் போது டிரைவர் வேண்டும் என விளம்பரம் கொடுத்துள்ளார். அவர்கள் அளித்த ஆவணங்களை கொண்டு மேலும் சில கார்களை திருடியுள்ளார்.

  ஜூம் நிறுவனத்தில் ஷிப்ட் காரை திருடிய நிலையில் அவர்கள் அளித்த புகாரில் பேரில் மார்ச் மாதத்தில் இருந்து போலீஸார் ஸ்கெட்ச் போட்டுள்ளனர். சிசிடிவி காட்சிகளை காட்சிகளை கொண்டு தற்போது அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த நூதன திருட்டு மூலம் இதுவரை 70 லட்சம் வரை கொள்ளையடித்திருப்பார் எனக் காவல்துறையினர் கூறுகின்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Ramprasath H
  First published: