தடுப்பூசி செலுத்திக் கொண்டுவர்களில் குறைந்த சதவீதம் பேருக்கே தொற்று பாதிப்பு ஏற்படுகிறது - மருத்துவ நிபணர்கள் தகவல்

கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுவர்களில் குறைந்த சதவீதம் பேருக்கே தொற்று பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

 • Share this:
  கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுவர்களில் குறைந்த சதவீதம் பேருக்கே தொற்று பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

  இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 13 கோடி டோஸ்க்கு மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில், தடுப்பூசி போடுவதால் ஏற்படும் பலன் குறித்து ஐசிஎம்ஆர் விளக்கமளித்துள்ளது.

  அதன்படி, கோவாக்சின் தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் எடுத்துக் கொண்ட 17 லட்சத்து 37 ஆயிரம் பேரில், 695 பேருக்கும்,  கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் எடுத்துக் கொண்ட, ஒரு கோடியே 57 லட்சம் பேரில் ஐயாயிரத்து 14 பேருக்கு தொற்று பரவியுள்ளது.

  முதல் தவணை கோவாக்சின் தடுப்பூசியை மட்டும் செலுத்திக் கொண்ட 93 லட்சம் பேரில் நான்காயிரத்து 208 பேருக்கும், முதல் தவணை கோவிஷீல்ட் தடுப்பூசியை செலுத்திக் கொண்ட 10 கோடிக்கும் அதிகமானோரில், 17 ஆயிரத்து 145 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

  அதாவது, கோவாக்சின் இரண்டாவது டோஸ் எடுத்துக் கொண்டவர்களில் பூஜ்ஜியம் புள்ளி 04 சதவீதம் பேரும், கோவிஷீல்டு இரண்டாவது டோஸ் எடுத்துக் கொண்டவர்களில் பூஜ்ஜியம் புள்ளி 03 விழுக்காடு பேருக்கு மட்டும் தொற்று பாதித்துள்ளது.

  தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் இடையேயான தொற்று பாதிப்பு மிகக் குறைவு தான் எனவும் ஐசிஎம்ஆர் கூறியுள்ளது.

  தடுப்பூசி இரண்டு டோஸ்கள் எடுத்துக் கொண்டவர்களுக்கு தொற்று பாதித்தாலும், அதன் வீரியம் பெரியளவில் இருக்காது என்று தொற்று நோய் மருத்துவர் சுப்ரமணியன் தெரிவிக்கிறார்.

  தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்களில் பெரும்பாலானோருக்கு தடுப்பூசியின் மூலம் கொரோனா நோயில் இருந்து பாதுகாப்பு கிடைப்பதாகவும், தடுப்பூசியினால் உயிர் சேதத்தை தவிர்க்கலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: