கோழிக்கோடு விமான நிலையத்தில் கடந்த 12 ஆண்டுகளில் நடந்த விபத்துகளும், அதன் பின்னணியும்...

கேரள விமான விபத்து

Air India Express Crash | கோழிக்கோடு விமான நிலையத்தில் கடந்த 12 ஆண்டுகளில் நிகழ்ந்துள்ள விபத்துக்களையும், அதன் பின்னணியையும் தற்போது காணலாம்..

 • Share this:
  சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இருந்து 2008-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதி வந்த "ஏர் இந்தியா ஏர்பஸ் 310" விமானம் கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விமானத்தின் வலது இறக்கை தரையில் உரசி விபத்துக்குள்ளானது. இதில், விமானத்தின் இறக்கை சேதமடைந்தது.

  2012-இல் ஜூலை 7ஆம் தேதி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் போயிங் விமானம் தரையிறங்கும் போது பெய்த கனமழையால் ஓடுதளத்தில் இருந்து விமானம் சறுக்கி விழுந்தது.

  2015 ஜூன் 15-ஆம் தேதி மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் விமான நிலைய அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். இருவர் படுகாயமடைந்தனர்.

  2017 ஏப்ரல் 25-ஆம் தேதி கோழிக்கோடு விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நொடிகளில் என்ஜின் கோளாறு ஏற்பட்டது. அப்போது விமானத்தின் இடதுபுற டயர் வெடித்தது.

  அதே ஆண்டு ஆகஸ்ட் 4-ஆம் தேதி ஸ்பைஸ்ஜெட் விமானம் தரையிறங்கும்போது ஓடுதளத்தில் இருந்து சறுக்கி விழுந்தது. அதில் விமான நிலையத்தில் இருந்த வழிகாட்டும் கோபுரம் சேதமடைந்தது.

  கோழிக்கோடு விமான நிலையம் மலைக்குன்றின் மீது அமைந்திருப்பதால் டேபிள் டாப் ரன்வே எனப்படும் ஓடுதள அமைப்பின் அடிப்படையில் அதன் ஓடுதளம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலைய டேபிள் டாப் ரன்வே நீளம் 2,850 மீட்டர் ஆகும்,

  ஆனால், 3,150 மீட்டர் தூரத்திற்கு குறைவான ரன்வேவாக இருந்ததால் அதில், விமானத்தை தரையிறக்குவது கடிமனான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதன்காரணமாக சர்வதேச விமான நிறுவனங்கள் போயிங் போன்ற பெரிய விமானங்களை கோழிக்கோடு விமான நிலையத்திற்கு இயக்குவதை தவிர்த்து வருகின்றன.

  இந்த சூழலில் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து நேற்று வந்த ஏர் இந்தியா விமானத்தின் கேப்டன், கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி கேட்டுள்ளார்.

  மேலும் படிக்க...மாற்றிமாற்றி கூட்டணி வைத்து எந்த பலனும் கிடைக்கவில்லை - பிரேமலதா விஜயகாந்த்

  அப்போது அனுமதி கிடைக்காததால் வானில் இருமுறை வட்டமிட்டபடி பறந்த விமானம் திடீரென ஓடுதளத்தின் எதிர்புறத்தில் தரையிறங்கியதாகக் கூறப்படுகிறது. அப்போது கனமழை பெய்ததால் ஓடுதளத்தில் சறுக்கிக் கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
  Published by:Vaijayanthi S
  First published: