• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • வாகன விபத்து இழப்பீடு கோரிக்கைகள் இனி 3 மாதங்களில் செட்டில் - வருடக்கணக்கில் காத்திருப்புக்கு முடிவு!

வாகன விபத்து இழப்பீடு கோரிக்கைகள் இனி 3 மாதங்களில் செட்டில் - வருடக்கணக்கில் காத்திருப்புக்கு முடிவு!

Insurance

Insurance

இனி விபத்துக்கான இழப்பீடுகளை பெற பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை இருக்காது

  • Share this:
மத்தியஸ்தம் மூலம் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோரிக்கைகளை தீர்ப்பதற்கான வழிமுறையை மத்திய அரசும், இன்சூரன்ஸ் நிறுவனங்களின் கூட்டமைப்பும் ஏற்றுக் கொண்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இனி விபத்துக்கான இழப்பீடுகளை பெற பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை இருக்காது என தெரியவந்துள்ளது.

வாகன விபத்துக்களில் காயமடைபவர்கள், உயிரிழப்பை சந்திப்பவர்களின் குடும்பங்கள் இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் இழப்பீடு கோரும் வழக்குகள் நீதிமன்றங்களில் வருடக்கணக்கில் காலதாமதமாக விசாரிக்கப்படுகின்றன. பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இதற்கு காரணமாக சொல்லப்படுகின்றன. காலதாமதம் ஏற்படுவதால் வாகன விபத்துக்களில் சிக்கும் குடும்பத்தினர் வாழ்வாதாரத்திற்காக சிரமப்படுகின்றனர்.

தேசிய நீதித்துறை கிரிட் அமைப்பின் தரவுகளின்படி, மோட்டார் வாகன விபத்து இழப்பீடுகளுக்கான தீர்ப்பாயத்தில் 7.36 மில்லியன் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், இவற்றில் 25% வழக்குகள் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை நிலையில் இருந்து வருவபையாகவும் உள்ளன. மேலும் இதில் 650 வழக்குகள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை நிலையில் இருப்பதாகவும்  தெரியவந்துள்ளது.

Also read:   மரபணு சோதனை மூலம் தனக்கு 50 சகோதரர்கள் இருப்பதை அறிந்து ஷாக் ஆன பெண் டிக்டாக் பிரபலம்!

இதனிடையே வாகன விபத்து இழப்பீடு கோரிக்கைகளை மத்தியஸ்தம் மூலம் செட்டில்மெண்ட் பெறும் வழிமுறை ஒன்றை மத்திய அரசும், இன்சூரன்ஸ் நிறுவனங்களின் கூட்டமைப்பும் ஏற்றுக்கொண்டதாகவும், இது தொடர்பான வரைவு அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு முன்னிலையில் நடைபெறும் வழக்கில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜெயந்த் கடந்த அக்டோபர் 26ம் தேதியன்று தாக்கல் செய்திருப்பதாகவும், வரும் நவம்பர் 16ம் தேதியன்று இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையில் இந்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் பரிசீலனை செய்யும் என கூறப்படுகிறது.

நீதிமன்றம் இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்டால் விரைவில் இது நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வரைவு அறிக்கையின்படி, இன்சூரன்ஸ் நிறுவனங்களின் கூட்டமைப்பு இதற்காக ஒரு மொபைல் அப்ளிகேஷனை அறிமுகம் செய்யும் எனவும், அந்த செயலியின் மூலம் நாடு முழுதும் நடக்கும் விபத்துக்கள் குறித்து காவல்துறையினர் பதிவு செய்யும் முதல் தகவல் அறிக்கை, விபத்து குறித்த விரிவான தகவல்கள், புகைப்படங்கள் உடனடியாக அதில் பதிவேற்றப்படும். இதன் மூலம் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் விரைவான நடவடிக்கை மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்படும்.

Also read: பணத்துக்காக மகளை விபச்சார கும்பலுக்கு விற்பனை செய்த காதலனை கொலை செய்து பழிதீர்த்த தந்தை – நெட்டிசன்கள் பாராட்டு!

விபத்தில் இழப்பீடு கோருபரும், இன்சூரன்ஸ் நிறுவனமும் இழப்பீடு தொகை குறித்து முடிவு எடுக்க இந்த மொபைல் ஆப் ஒரு களமாக இருக்கும் எனவும், இன்சூரன்ஸ் நிறுவனம் அந்த தொகையை ஏற்க சம்மதித்தால், உடனடியாக இது குறித்து மத்தியஸ்த அமைப்பு அல்லது ஆன்லைன் மத்தியஸ்த மையமானது மோட்டார் வாகன விபத்து இழப்பீடுகளுக்கான தீர்ப்பாயத்திற்கு பரிந்துரை செய்து ஒப்புதல் கொடுக்கப்படும் எனவும் பின்னர் இன்சூரன்ஸ் நிறுவனம் தொகையை உரியவர்களின் கணக்கில் வரவு வைக்கும். இந்த பரிவர்த்தனை தொடர்பான ஸ்டேட்டஸை கூட, அந்த மொபைல் ஆப்பின் மூலமே அறியும் வசதியும் ஏற்படுத்தப்படும். ஒருமித்த கருத்து ஏற்படாமல் இருந்தாலும் கூட அந்த ஆப்பின் மூலம் அடுத்தகட்ட மேல்நடவடிக்கைக்கு இழப்பீடு கோருபவருக்கு வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: