Home /News /national /

இரண்டு தனியார் பேருந்துகளின் போட்டிக்கிடையே விபத்தில் சிக்கிய தந்தை-மகன் - பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

இரண்டு தனியார் பேருந்துகளின் போட்டிக்கிடையே விபத்தில் சிக்கிய தந்தை-மகன் - பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

விபத்தில் கிக்கிய தந்தை-மகன்

விபத்தில் கிக்கிய தந்தை-மகன்

கேரளாவில் இரண்டு தனியார் பேருந்துகளின் போட்டிக்கிடையே விபத்தில் மாட்டிக் கொண்ட தந்தையும் மகனும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kerala, India
கேரள மாநிலம் ஆலுவா பகுதியில் யார் முந்தி செல்வது என்று இரண்டு தனியார் பேருந்துகளுக்கு இடையே ஏற்பட்ட போட்டியில், அதி வேகத்தில் வந்த தனியார் பேருந்து ஒன்று சாலையின் ஓரம்  ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த தந்தை-மகன் மீது வேகமாக உரசியது.

இதனால் அவர்கள் இருவரும் தடுமாறி  கீழோ விழுந்ததில், காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் ஒடி வந்து அவர்களை தூக்கி மீட்டனர். பின்னர், மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து ஆலுவா போலீசார் விசாரணை நடத்தினர். இதில், விபத்தில் மாட்டிக் கொண்டவர்கள், நாயத்தோடு என்னும் பகுதியை சார்ந்த தந்தை ஜோளி, மகன் பாபிடோன் என்பது தெரியவந்துள்ளது. இந்த விபத்து நடந்தபோது, அங்கிருந்த பொதுமக்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்போது, யார் முந்தி செல்வது என்ற இரண்டு தனியார் பேருந்துகளின் போட்டி காரணமாகவே இந்த விபத்து நடந்திருப்பதாக தெரியவந்தது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் கூறிய விவரங்களின் அடிப்படையில் போலீசார் இரண்டு தனியார் பேருந்துகளின் டிரைவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Must Read : சமையல் அறையில் விளையாடிய குழந்தைக்கு ஏற்பட்ட விபரீதம்... பாத்திரத்தில் மாட்டி கொண்ட குழந்தையின் தலை போராடி மீட்பு

இந்நிலையில், இந்த விபத்து நடந்தபோது அருகில் இருந்த கடையில் பதிவான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் பச்சை நிற பேருந்து ஒன்று, சாலையின் ஓராமாக சென்று கொண்டிருந்தவர்கள் பைக் மீது மோதுவதும், இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த அவர்கள் நிலை தடுமாறி கீழே விழும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.

அவர்கள் சற்று விலகி விழுந்திருந்தால் அவர்கள் மீது பேருந்தின் சக்கரம் ஏறி இருக்கும். அதிஷ்ட வசமாக அவர்கள் உயிர் பிழைத்துள்ளனர்.
Published by:Suresh V
First published:

Tags: Accident, Bus, Kerala

அடுத்த செய்தி