தங்கள் இயலாமை, தோல்விகளை ஒப்புக் கொள்ளும் குணம் ரத்தத்திலேயே இல்லை: அரசியல்வாதிகள், அதிகாரிகள் மீது கோர்ட் காட்டம்

டெல்லி உயர்நீதிமன்றம்

அரசியல்வாதிகள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் ரத்தத்தில் தோல்வியை ஒப்புக் கொள்ளும் குணமே கிடையாது, என டெல்லி உயர் நீதிமன்றம் காட்டம் காட்டியுள்ளது.

 • Share this:
  டெல்லியில், கீழமை நீதிமன்ற நீதிபதிகள், அலுவலர்கள் உள்ளிட்ட 852 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு, டெல்லி அரசு உறுதி அளித்தபடி, கொரோனா சிகிச்சைக்கான வசதிகளை அளிக்கவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக, டெல்லி உயர் நீதிமன்றத்தில், மாநில நீதித் துறை சேவைகள் சங்கம் மனு தாக்கல் செய்திருந்தது.

  இந்த மனு, டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி விபின் சங்கி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

  அரசியல் சாசனப்படி பதவி வகிக்கும் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு என அரசு வழிகாட்டுதல் கள் உள்ளன. ஆனால், கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்கு அதுபோல இல்லை.

  அவர்கள், கொரோனா காலத்திலும், வழக்குகளை நேரடியாக விசாரிக்க வேண்டிய நிலையில் உள்ளனர். அதனால், நோயால் பாதிக்கும் வாய்ப்பும் அதிகமாக உள்ளது.

  அத்தகையோர், தங்கள் மகன் அல்லது குடும்பத்தார் கொரோனாவால் பாதிக்கப்படும் சூழலில், எப்படி நிம்மதியாக பணியாற்ற முடியும். ஏற்கனவே, மூன்று நீதிபதிகள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

  இந்நிலையில், கீழ் நீதிமன்றங்களைச் சேர்ந்தவர்களுக்கு போதிய மருத்துவ வசதிகள் கிடைக்காத பட்சத்தில் நிலைமை இன்னும் மோசமாகும்.

  எனவே, கீழ் நீதிமன்ற நீதிபதிகளை முன்களப் பணியாளர்களாக அறிவிக்கலாம். அவர்களுக்கு செய்துள்ள மருத்துவ வசதிகள் குறித்து, டெல்லி அரசு தாக்கல் செய்த மனு திருப்தி அளிப்பதாக இல்லை.

  உத்தரவுஅரசியல்வாதிகளுக்கும், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கும் தங்களின் இயலாமை, தோல்வி ஆகியவற்றை ஒப்புக் கொள்ளும் மனோபாவம், அவர்களின் ரத்தத்திலேயே கிடையாது.

  நீதிபதிகளின் மருத்துவ சிகிச்சை தொடர்பான குறைகளுக்கு, டில்லி அரசு தீர்வு காண வேண்டும். அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
  Published by:Muthukumar
  First published: