ஊரடங்கு தோல்வியடைந்துவிட்டது என்பதை ஒப்புக்கொள்ளுங்கள் - ராகுல் காந்தி

கொரோனா பரவலைத் தடுக்கும் ஊரடங்குத் திட்டம் தோல்வியடைந்துவிட்டது என்பதை பிரதமர் நரேந்திர மோடி ஒப்புக்கொள்ளவேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு தோல்வியடைந்துவிட்டது என்பதை ஒப்புக்கொள்ளுங்கள் - ராகுல் காந்தி
ராகுல் காந்தி
  • Share this:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இணைய வழியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கும் சமயத்தில் ஊரடங்கை தளர்த்தும் ஒரே நாடு இந்தியாவாகத்தான் இருக்கும். புலம்பெயர் தொழிலாளர்கள் நம்பிக்கை இழந்து இருந்தனர். அவர்கள் தனித்துவிடப்பட்டது போல உணர்ந்துள்ளனர். நம்பிக்கை இழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

அந்த வார்த்தையைக் கேட்க நான் விரும்பவில்லை. ஒரு இந்தியர் கூட அந்த வார்த்தையை சொல்லக்கூடாது என்று நான் விரும்புகிறேன். ஆனால், அவர்கள் அதிகமாக மிக அதிகமாக அந்த வார்த்தையை கூறுகின்றனர். நாம் இப்போதுகூட நடவடிக்கை எடுக்கலாம். மாதம் 7,500 ரூபாய் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும். பணம் மற்றும் பொருளாதாரத்தை நாம் ஊக்குவிக்க வைக்க வேண்டிய தேவை உள்ளது. அதைச் செய்யாவிட்டால் மிகப் பெரிய ஆபத்தாக அமைந்துவிடும்.

கொரோனா பிரச்னையுடன் வேலையின்மை பிரச்னை ஒன்றிணைந்த ஒன்றாக உள்ளது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் நோக்கம் தோல்வியைடந்துள்ளது. ஊரடங்கு தோல்வியின் விளைவை இந்தியா சந்தித்துக் கொண்டிருக்கிறது. பிரதமர் மோடி ஊரடங்கு தோல்வியை ஒப்புக்கொள்ளவேண்டும். மோடி, பின்நோக்கி கால்களை எடுத்துவைக்கிறார். அவர், முன்னோக்கி கால்களை எடுத்துவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Also see:
First published: May 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading