• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பெண் போல பேசி சிறுமிகளை சமூக வலைத்தளத்தில் இப்படியும் ஏமாத்துறாங்க.. யுடியூப் மூலம் மோசடி பாடம்!

பெண் போல பேசி சிறுமிகளை சமூக வலைத்தளத்தில் இப்படியும் ஏமாத்துறாங்க.. யுடியூப் மூலம் மோசடி பாடம்!

Online Fraud

Online Fraud

உள்ளூரில் இருந்து கொண்டே வெளியூர் நம்பர்களை போல கால் செய்யும் 'Text Now' போன்ற செயலிகள் குறித்தும் அறிந்திருக்கிறார்.

  • Share this:
கனடாவில் இருந்து பேசுவதாக கூறி பெண் போல நடித்து சிறுமியிடமிருந்து ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களை பெற்றுக்கொண்ட ஏசி மெக்கானிக் ஒருவரை காவல்துறையினர் அலேக்காக தூக்கியுள்ளனர். இவர் இன்ஸ்டாகிராமில் பல சிறுமிகளிடம் பெண் போல பேசி ஆபாச வீடியோக்களை வாங்கி, பின் அவர்களை மிரட்டி வந்தது தெரியவந்துள்ளது.

டெல்லியைச் சேர்ந்த 15 வயது சிறுமியிடம் அவரின் சமூக வலைத்தள பக்கம் மூலமாக கனடாவில் இருந்து பேசுவதாக கூறி அறிமுகம் செய்து கொண்ட நபர் ஒருவர் நட்பாக பழகியிருக்கிறார். பெண் போல பேசி வந்ததால் சிறுமியும் நம்பிக்கையுடன் பழகியிருக்கிறார். அந்த நபர் சிறுமியிடம் நைசாக பேசி அவரிடமிருந்து ஆபாச புகைப்படங்களையும், வீடியோக்களையும் வாங்கியிருக்கிறார். இதன் பின்னர் பெண் வேஷம் கலைத்து சிறுமியை மிரட்டத் தொடங்கியிருக்கிறார் அந்த நபர். அதிர்ச்சியடைந்த அச்சிறுமி இது குறித்து கடந்த ஆகஸ்ட் 27 அன்று டெல்லி காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறார் அச்சிறுமி.

சம்பவத்தில் தொடர்புடைய இணைய விவரங்கள் மூலம் வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய டெல்லி காவல்துறை அந்த நபரின் இருப்பிட விவரங்களை தெரிந்து கொண்டனர்.

அந்த நபர் லக்னோவைச் சேர்ந்த ஏசி மெக்கானிக் அப்துல் சமது என அறிந்த காவல்துறையினர், அவரின் வீட்டில் வைத்து கைது செய்து டெல்லி அழைத்து வந்துள்ளனர்.

Also read: ரயிலில் ஜட்டியுடன் வாக்கிங் சென்ற எம்.எல்.ஏ – பயணிகள் அதிர்ச்சி!

பின்னர் அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தது.

அப்துல் சமது, யூடியூப் மூலமாக இணையம் குறித்தும் சமூக வலைத்தளங்கள் குறித்தும் உள்ளூரில் இருந்து கொண்டே வெளியூர் நம்பர்களை போல கால் செய்யும் 'Text Now' போன்ற செயலிகள் குறித்தும் அறிந்திருக்கிறார். சிறுமிகளிடம் பேச வேண்டும் என்ற எண்ணத்துடன், தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி கனடாவில் இருந்து பேசும் பெண்ணாக காட்டிக்கொண்டு உள்ளூர் சிறுமிகளிடம் நட்பு வளர்த்திருக்கிறார்.

Also read:   சட்டமன்றத்தில் பிரிட்டிஷார் காலத்திய ரகசிய சுரங்கம் கண்டுபிடிப்பு..

இன்ஸ்டாகிராமில் பல்வேறு போலி கணக்குகளை உருவாக்கி வைத்துக் கொண்டு, அதன் மூலம் சிறுமிகளிடம் சாட் செய்து நைசாக பேசி ஆபாச வீடியோக்களை வாங்கி அதனை வைத்து அவர்களை மிரட்டுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். சில நேரங்களில் சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை இணையத்திலும் பதிவிட்டிருக்கிறார்.

தொழில்நுட்பத்தை கையில் வைத்துக் கொண்டு அதனை தவறான நோக்கங்களுக்காக பயன்படுத்தி வரும் நபர்களின் எண்ணிக்கையும், செயல்களும் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் ஆன்லைன் பாடங்களுக்காக மொபைல்களை கையில் வைத்திருக்கும் சிறுவர்கள் அதை படிப்பதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். பெற்றோர்களும் அவர்களை அவ்வப்போது கண்காணித்து நல்வழிப்படுத்த வேண்டும் என்றும் போலீசார் வலியுறுத்தினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: