Home /News /national /

அதிகாலையில் வெடித்த ஏசி - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சோகம்

அதிகாலையில் வெடித்த ஏசி - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சோகம்

மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஏசியை செக் செய்து முறையாக சர்வீஸ் செய்வது அவசியம்.

மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஏசியை செக் செய்து முறையாக சர்வீஸ் செய்வது அவசியம்.

மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஏசியை செக் செய்து முறையாக சர்வீஸ் செய்வது அவசியம்.

வீட்டின் ஏசி வெடித்து விபத்துக்குள்ளானதில் கர்நாடகாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடகா மாநிலம் விஜயநகர மாவட்டத்தில் உள்ள மரியமானஹள்ளி கிராமத்தில் வசித்தவர் வெங்கட் பிரசாத். 42 வயதான வெங்கட் பிரசாத்திற்கு சந்திரகலா என்ற மனைவியும், ஆத்விக், பிரேர்னா என்ற குழந்தைகளும் இருந்தனர்.

இவர்கள் அப்பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று அதிகாலை 12.40 மணிக்கு இவர்கள் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தபோது, வீட்டின் ஏசி ஷார்ட் சர்க்யூட் ஆகி வெடித்துள்ளது. இதன் காரணமாக தீப்பற்றியதுடன் ஏசியிலிருந்து விஷவாயு கசிந்ததில் குடும்பத்தைச் சேர்ந்த நால்வரும் உயிரிழந்தனர்.

இதையும் படிங்க - சாலை விபத்து உயிரிழப்புகளில் இந்தியா முதலிடம்... மத்திய அமைச்சர் நதின் கட்கரி வேதனை

இந்த வீட்டின் உரிமையாளரான ராகவேந்திரா ஷெட்டியின் மனைவி ராஜஸ்ரீ தீப்பிடித்ததை கவனித்து கணவரிடம் தெரிவித்துள்ளார். இவர்கள் தகவலை வெங்கட்டிடம் செல்போன் மூலம் தெரிவித்து வீட்டை விட்டு வெளியேறுமாறு எச்சரித்துள்ளனர்.ஆனால் விஷவாயுவால் மூச்சு திணறிய வெங்கட் குடும்பத்தினர் வெளியேற முடியாமல் வீட்டிலேயே உயிரிழந்தனர்.

இதையும் படிங்க - ஜார்க்கண்டில் ஆட்டம் காணும் காங்கிரஸ் கூட்டணி.. டெல்லி விரைந்த எம்எல்ஏக்கள், பலிக்குமா பாஜக கனவு!!

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். வெங்கட் குடும்பத்திற்கு ஏதேனும் கடன் தொல்லை போன்ற பிரச்சனைகள் உள்ளதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

ஏசி விபத்துகளை தவிர்ப்பது எப்படி?

நாடு முழுவதும் கோடைக்காலம் நிலவிவரும் நிலையில், சில இடங்களில் இதுபோன்ற ஏசி விபத்துகள் ஏற்படுவது காணப்படுகிறது. வீட்டில் நிகழும் ஏசி விபத்துகளை தவிர்க்க நிபுணர்கள் பொதுவான சில முன்னெச்சரிக்கை வழிகாட்டுதலை கூறியுள்ளனர்.

வின்டோ மற்றும் ஸ்பில்ட் ஏசி பயன்படுத்துபவர்கள், அதன் பில்டர்களை ரெகுலராக சுத்தம் செய்வது அவசியம். பில்டர்களை நீண்ட நாள் சுத்தம் செய்யவில்லை என்றால் வெப்பம் அதிகரித்து ஸ்பார்க் ஏற்படும் அபாயம் உள்ளது.

ஏசியின் நியூட்ரல் மற்றும் பேஸ் கனெக்ஷன்கள் டைட்டாக பிளக் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

மின் சப்ளை செய்யும் வையர்கள் முறையான தடிமனுடன் இருக்க வேண்டும்.அளவு குறைவான தடிமன் கொண்ட வையர்கள் எரிந்துவிடும் அபாயம் கொண்டவை.

ஏக்ஸ்டென்ஷன் பாக்ஸில் ஏசி பிளக்கை ஒருபோதும் கனெக்ட் செய்து பயன்படுத்தக் கூடாது.

மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஏசியை செக் செய்து முறையாக சர்வீஸ் செய்வது அவசியம்.

ஏசியின் பவர் சப்ளைக்கு அலுமினியம் வையர்கள் பயன்படுத்துவதை தவிக்க வேண்டும். காப்பர் வையர்களை பயன்படுத்துவதே முறையாகும்.
Published by:Musthak
First published:

Tags: Karnataka

அடுத்த செய்தி