Home /News /national /

எந்த மாநிலத்தையும் யூனியன் பிரதேசமாக மாற்றுவார்கள் - 370 சட்டப்பிரிவு வழக்கில் வழக்கறிஞர் ராஜீவ் தவான் வாதம்

எந்த மாநிலத்தையும் யூனியன் பிரதேசமாக மாற்றுவார்கள் - 370 சட்டப்பிரிவு வழக்கில் வழக்கறிஞர் ராஜீவ் தவான் வாதம்

ஜம்மு காஷ்மீர்

ஜம்மு காஷ்மீர்

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது பிரிவை நீக்கும் முடிவை திரும்பப்பெற முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

    370வது பிரிவு நீக்கத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. அப்போது ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால், 370வது பிரிவை நீக்கும் முடிவை திரும்பப்பெற முடியாது என்றார். மேலும், காஷ்மீருக்கான தனித்த இறையாண்மை என்பது தற்காலிகமானதே என்றும், இந்தியா மாநிலங்களின் ஒன்றியமாக தான் இருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.

    அரசியல் சாசனத்தின் 3வது பிரிவை பயன்படுத்தி, ஒரு மாநிலத்தை யூனியன் பிரதேசமாக தகுதிக்குறைப்பு செய்வது இந்தியாவில் இதுவே முதல்முறை என்றும், ஒரு மாநிலத்தில் இவ்வாறு செய்ய அனுமதித்தால், அடுத்து எந்த மாநிலத்தையும் அவர்கள் தகுதிக்குறைப்பு செய்வர் என்றும் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ராஜீவ் தவான் கூறினார்.

    இதையடுத்து வழக்கு விசாரணையை 7 நீதிபதிகள் கொண்ட விரிவடைந்த அமர்வுக்கு மாற்றுவது தொடர்பான உத்தரவை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

     
    Published by:Sankar
    First published:

    Tags: Article 370

    அடுத்த செய்தி