ஈராக் எண்ணெய் கிணறுகளில் வேலைபார்க்கும் சுமார் 25,000 இந்தியர்கள் நிலை குறித்து தூதரகம் விளக்கமளித்துள்ளது.
அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரான் நாட்டின் தளபதி தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடி தரும் விதமாக ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது.
இந்த தாக்குதலை அமெரிக்கா ராணுவ தலைமையகமான பெண்டகனும் உறுதி செய்துள்ளது. தங்கள் நாட்டு படைகளுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை எனவும் அமெரிக்கா கூறியுள்ளது.
Also Read : உக்ரைன் பயணிகள் விமானத்தை ஈரான் படைகள் தவறுதலாக சுட்டு வீழ்த்தியது?
இந்த தாக்குதலை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையே எப்போது வேண்டுமானாலும் போர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஈராக்கின் எண்ணெய் கிணறுகளில் பெருமளவில் இந்தியர்கள் வேலை செய்து வருகிறார்கள். இவர்களில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்தவர்கள் அதிகமாக உள்ளனர்.
அமெரிக்கா - ஈரான் போர் பதற்றம் காரணமாக ஈராக்கில் பணிபுரிபவர்கள் தலைநகர் பாக்தாத் மற்றும் தெற்கு துறைமுக நகரமாக பாஸ்ராவில் குவிந்து வருகின்றனர். பாக்தாத்திலிருக்கும் ஐ.நா தூதரை நியூஸ்18 தொலைக்காட்சி தொடர்பு கொண்டது. அப்போது “இங்கு பதற்றமான சூழல் உருவாகி உள்ளது. எல்லா இடங்களிலும் பீதியான சூழல் நிலவி உள்ளது. ஆனால் அனைத்து இந்தியர்களும் பாதுகாப்பாக இருப்பதை என்னால் உணர்த்த முடியம். நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்“ என்றார்.
மேலும் ஈராக்கில் இயல்பு நிலை மீண்டும் திரும்பும் வரை புதிததாக யாரும் இந்தியாவிலிருந்து வேலைக்கு வரவேண்டாமென்று அறிவுறுத்தி உள்ளார். ஏராளமான இந்தியர்கள் எர்பில் மற்றும் குர்திஸ்தான் பகுதிளில் வேலை பார்த்து வருகிறார்கள். குர்திஸ்தான் பாதுகாப்பான பகுதி. ஆனால் எர்பில் அருகே தான் அமெரிக்கத் தளம் ஈரானால் தாக்கப்பட்டுள்ளது. இது பதட்டங்களுக்கு வழிவகுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.