• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • 2025-க்குள் அனைத்து டூவீலர்களும் எலெக்ட்ரிக்காக இருக்க வேண்டும் - ஓலா இணை நிறுவனர் விருப்பம்!

2025-க்குள் அனைத்து டூவீலர்களும் எலெக்ட்ரிக்காக இருக்க வேண்டும் - ஓலா இணை நிறுவனர் விருப்பம்!

2025-க்குள் எலெக்ட்ரி டூவீலர்

2025-க்குள் எலெக்ட்ரி டூவீலர்

ஓலாவின் இணை நிறுவனரான பவிஷ் அகர்வால், இந்தியாவில் இறக்குமதி செய்ய விரும்பும் எந்த நிறுவனமும் (இந்திய அல்லது சர்வதேச நிறுவனங்கள்), இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

  • Share this:
எரிபொருள் விலை வரலாறு காணாத உயர்வை சந்தித்துள்ள நிலையில் மக்களின் கவனம் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் பக்கம் திரும்பி இருக்கிறது. இதனிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 2 வேரியன்ட்களில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.

எலெக்ட்ரிக் வாகன சந்தையில் பெரிய வரவேற்பை பெறும் என்ற எதிர்பார்புகளை பூர்த்தி செய்யும் வகையில், ஜூலை 15 அன்று தனது மின்சார ஸ்கூட்டருக்கான முன்கூட்டிய ஆர்டர்களை எடுக்கத் தொடங்கிய ஓலா, முதல் 24 மணி நேரத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட புக்கிங்களை பெற்றதாக கூறுகிறது .

இதனிடையே ஓலாவின் இணை நிறுவனரான பவிஷ் அகர்வால், இந்தியாவில் இறக்குமதி செய்ய விரும்பும் எந்த நிறுவனமும் (இந்திய அல்லது சர்வதேச நிறுவனங்கள்), இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார். ஓலா S1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான ப்ரி லான்ச் நிகழ்வில் பேசிய அகர்வால், இந்தியாவில் ஒரு நிலையான புரட்சியை உருவாக்க வேண்டும் மற்றும் நாட்டின் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி சுற்றுச்சூழல் அமைப்புகளை வளர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.



ALSO READ |  ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிக தூரம் செல்ல கூடிய சில எலெக்ட்ரிக் டூ வீலர்களின் பட்டியல்...!

முதலீடு செய்ய இந்தியா சிறந்த நாடு என்பதால், இந்தியர்கள் அல்லது சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவில் அதிக முதலீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனிடையே வரும் 2025-ம் ஆண்டிற்குள் அனைத்து பெட்ரோல் இருசக்கர வாகனங்களின் விற்பனையும் நிறுத்தப்பட்டு, அவை எலெக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனையாக இருக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார் பவிஷ் அகர்வால். தொழில் நிறுவனங்கள் மற்றும் நுகர்வோர் ஒன்றிணைந்து 2025-க்குப் பிறகு இந்தியாவில் எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களை மட்டுமே விற்பனை செய்ய உறுதியளிக்க வேண்டும் என்று தாம் கருதுவதாக கூறியிருக்கிறார்.



ஓலாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் நேற்று அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் ஒரு வலைப்பதிவில், அகர்வால் தனது 'மிஷன் எலெக்ட்ரிக்' எண்ணம் பற்றி பகிர்ந்து கொண்டுள்ளார். இது தொடர்பாக தனது கருத்துக்களை ஷேர் செய்துள்ள அவர், 2025ம் ஆண்டுக்கு இந்தியாவில் பெட்ரோல் இரு சக்கர வாகனம் விற்கப்படாது என்ற உறுதிமொழியை 'மிஷன் எலெக்ட்ரிக்' மூலம் அறிவிக்க இந்த தருணத்தை எடுத்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். மின்மயமாக்கலில் இந்தியா முன்னணி வகிக்கும் மற்றும் எதிர்கால தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கான நேரம் வந்துவிட்டது.



ALSO READ |  விரைவில் ஹீரோ மோட்டார் நிறுவனத்தின் ’எலக்டிரிக் ஸ்கூட்டர்’ அறிமுகம்..

தற்போது தான் பகிர்ந்து கொண்டுள்ள இலக்கு நிச்சயமாக எளிதாக இருக்க போவதில்லை என்று குறிப்பிட்டுள்ள பவிஷ் அகர்வால், நம் அனைவரும் ஒருமித்த கருத்துடன் இருந்தால் இந்த இலக்கை எட்ட முடியும் என்று கூறியிருக்கிறார். தற்போது நிலவி வரும் காலநிலை நெருக்கடிக்கு இது தேவை, உலகமும் இதை தான் விரும்புகிறது, நம் நாடு நிச்சயமாக இதற்கு தகுதியானது. மாறி வரும் காலநிலை மாற்றத்தை கவனித்து அதை மீண்டும் சரியாக மாற்றியமைக்க வேண்டிய அவசியம் தற்போது உள்ளது.



இன்று இந்தியாவில் விற்கப்படும் 80% வாகனங்கள் இரு சக்கர வாகனங்கள் இருந்த போதிலும், இந்தியாவில் 12% மட்டுமே இரு சக்கர வாகனம் வைத்திருக்கிறார்கள். இந்த வாகனங்கள் ஒவ்வொரு ஆண்டும் 12,000 கோடி லிட்டர் எரிபொருளை எடுத்து கொண்டு இயங்கி வருகின்றன மற்றும் 40% காற்று மாசுபாட்டிற்கு காரணமாக இருக்கின்றன என்றும் கூறியிருக்கிறார். தற்போதைய இரு சக்கர வாகன நிறுவனங்கள் பெட்ரோலை வாகனங்கள் தயாரிப்பதை நிராகரிக்க வேண்டும்.

ALSO READ |  ஒற்றை சீட்டுடன் கச்சிதமான வடிவில் அறிமுகமான Honda U-BE எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!

நுகர்வோர் ஏற்கனவே அதை நிராகரித்து வருகின்றனர். எனவே முழுமையாக எலெக்ட்ரிக் வாகன தயாரிப்புகளில் இரு சக்கர வாகன நிறுவனங்கள் ஈடுபட உறுதியளிக்க கேட்டு கொள்கிறோம். அவர்களும், நாங்களும் இந்த வேலையை சரியாக செய்தால் 2025-க்குள், இந்தியாவை பெட்ரோல் இல்லா டூ வீலர் சந்தையாக மாற்ற முடியும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.



இது நடந்தால் உலகை வழிநடத்தி, இந்தியாவை மின்சாரத்திற்கான உலகளாவிய மையமாக மாற்ற முடியும் என்றார். தவிர தங்களது ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனமான ஓலா எலக்ட்ரிக், ஆசிய நாடுகள், லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கும் கூட வாகனங்களை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது என்றும் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: